பெண்கள் பிரச்சினைகள் மீதான விவாதம்

பெண்கள் உரிமைகள் மீதான அரசியல் தலைவர்களுக்கிடையிலான தொலைக்காட்சி விவாதம் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. பிரதமர் ”ஸ்டீபன் ஹார்ப்பர்” பங்குகொள்ள மறுக்கின்ற இந்த விவாதத்தில் ”தோமஸ் மொல்கேயர்” உம் கலக்க விருப்பமின்மை கொண்டுள்ளார். 175 பெண்கள் குழுக்களின் கூட்டமைப்பானது ரொறொன்ரோவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி இந்த விவாதத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தது. பெண்கள் பிரச்சினைகள் மற்றும் பாலின சமத்துவம் போன்ற விடயங்களே இந்த விவாதத்தின் கருப்பொருட்களாக அமைய இருந்தன.

விவாத அமைப்பாளர்கள் அக்டோபர் 3, 2014இல் , புதிய ஜனநாயகக் கட்சியிடமிருந்து இந்த விவாதத்தில் பங்கேற்பதற்கான சம்மதக் கடிதத்தைப் பெற்றிருந்தனர். இந்த உறுதிப்படுத்தல் தகவலை, Sarah Kennell ( பேச்சாளர் -Action Canada for Sexual Health and Rights) அவர்கள் வழங்கியிருந்தார். ஆனால் ”மொல்கெயர்” அவர்கள் ”ஹார்ப்பர்” பங்கெடுக்கும் விவாதங்களில் மட்டுமே தான் கலந்து கொள்ள முடியுமென்று இப்பொழுது கூறியுள்ளார்.

 

 

Share This Post

Post Comment