Day: August 13, 2015

மகிந்தாவைத் தாக்கும் சந்திரிகா

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஆதரவாக செயற்படக் கூடிய பிரதமரை நியமிப்பது எங்கள் அனைவரதும் கடமையாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். பலாங்கொடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  பொதுத்தேர்தலில் ஏதாவது ஒரு முறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராகினால் நாடாளுமன்றம் மாத்திரமின்றி முழு நாடும் குழப்பமடைந்து விடும். ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் அன்று கருத்து மோதல் ஏற்பட்டன,…

இலங்கைத் தேர்தல் – 2015

  இலங்கையின் மொத்தத் தேர்தல் மாவட்டங்கள்: 22 இலங்கையின் தேர்தல் மாவட்டங்களில் கொழும்பில் அதிகபட்சமாக 19 தொகுதிகளும் குறைந்தபட்சமாக திரிகோணமலையில் 4 தொகுதிகளும் இடம்பெற்றிருக்கின்றன. நாடு முழுவதும் முழுவதும் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை: 12,314 இலங்கையில் பதிவு செய்திருக்கும் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 1,50,44,490 இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை: 64 தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை: 3653 சுயேச்சைக் குழுக்களிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை:…

தேர்தலும் வட மாகாண முதல்வரும்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தங்களது கடமையை செய்ய தவறின், அது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் கேடாய் அமைந்து விடும் எனவும்  மக்கள் தங்களது வாக்கு பலத்தை சரியான முறையில் பயன்படுத்தி, சிறந்த பிரதிநிதி ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும்  வட மாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு…

மகிந்த ராஜபக்‌சவின் தோல்வி அவரின் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ளது

மகிந்த ராஜபக்‌சவின் தோல்வி அவரின் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பிரதமராவதற்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜே.வி.பி. ஐக்கிய தேசிய கட்சியின் வால் அல்ல என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே ஐக்கிய தேசியக் கட்சியின் இதயமாக மாறி உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதேபோன்று எதிர்காலத்திலும் எந்தவொரு கட்சிக்கும் ஜே.வி.பி. வாலாக மாறப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே…

சம்மந்தன் வலியுறுத்தும் புதிய அரசியல் சாசனம்

இலங்கையின் தற்போதைய அரசியல் சாசனம் நீக்கப்படவேண்டும். புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தப் புதிய அரசியல் சாசனத்தின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிட்டவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் தற்போது ஒரு வரட்டுத்தனமான போக்கைக் கடைப்பிடிக்க முடியாது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு…

சமஷ்டிக் கோரிக்கையும் பிரமதர் ரணிலும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள சமஷ்டி கோரிக்கையை என்றுமே தாம் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அது தொடர்பில் கூட்டமைப்புடன் எந்தவொரு ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை என்று ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் அன்று முன்வைக்கப்பட்ட சமஷ்டி கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருந்தால் 2005ஆம் ஆண்டில் தாம் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், எனினும் அதனை மறுத்தபடியினால் தோல்வியை சந்திக்க நேரிட்டதாகவும் கூறினார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் இன்று வியாழக்கிழமை விசேட ஊடகவியலாளர் மாநாட்டை…

சீன நாணயத்தின் மதிப்பு குறைந்தது

சீன நாணயமான யுவானின் மதிப்பை மூன்றாவது நாளாக சீனா குறைத்து அறிவித்துள்ளது. டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பு 1 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. முந்தைய நாளின் வர்த்தகத்தைப் பொறுத்து, தினந்தோறும் யுவானின் மதிப்பை நிர்ணயிக்கப்போவதாக செவ்வாய்க்கிழமையன்று சீன மத்திய வங்கி தெரிவித்தது. சீனாவின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தியது.சீனாவின் ஏற்றுமதி குறித்த புள்ளிவிவரங்களில், அதன் ஏற்றுமதி குறைந்திருப்பது தெரியவந்தது. இதனால், சீனப் பொருளாதாரம் நீண்டகால மந்த நிலையை நோக்கிச் செல்கிறதோ…

மகிந்தாவுக்கு மைத்திரி கடிதம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றால் இதுவரை பிரதமர் பதவி வழங்கப்படாத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவருக்கு அந்த பதவி வழங்கப்படுவது அவசியமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார். இம்முறை நாடாளுமன்றத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்வதற்காகத் தான் முன்னின்று செயல்படத் தீர்மானித்திருந்ததாக அந்தக் கடிதத்தில் கூறியிருக்கும் சிறிசேன, மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததால், இந்தத் தீர்மானத்தைத் தான் கைவிட்டதாக கூறியிருக்கிறார்.அதற்கு…