கனடியப் பிரதமரை விமர்சிக்கும் ”யஸ்ரின் ரூடோ”

லிபரல் கட்சித் தலைவர் ‘ஜஸ்டின் ரூடோ’  பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தனது மூத்த பணியாளர்கள் , சிலரைப் பதவியிலிருந்து வெளியேற்ற  வேண்டும் என்று கூறியுள்ளார். செனட்டர் ‘மைக் டஃபி’ இனது  செலவினங்களுக்காக  ‘நைஜல் ரைட்’ (ஹார்ப்பரது முன்னாள் தலைமை அலுவலக நிர்வாகி)    90,000  கனடிய டொலர்கள் கொடுத்தது  பற்றி இந்த வாரம் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கில் ‘நைஜல் ரைட்’ குறுக்கு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார் ‘மைக் டஃபி’ இன் வழக்கறிஞரினால்.

‘ரைட்’ தனது சொந்தப் பணத்திலிருந்து ‘ டஃபிக்கு’ பணம் கொடுத்தார் என்ற விடயத்தைப் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த பணியாளர்களில் மேலும் சிலர் அறிந்துள்ளனர். ஆனால் இது தொடர்பான கதைகளைப் பிரதமர் அலுவலகம் மூடிமறைத்தலில் ‘நோவாக்கின்’ (தற்போதைய பிரதமர் அலுவலகத் தலைமைச்செயலர்)  பங்கு நீதிமன்றக் குறுக்கு  விசாரணைகளின் மூலம் வெளியாகியுள்ளது.

மின்னஞ்சல்கள் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டதால் பல உண்மைகள் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவை புதியதொரு அரசியல் நெருக்கடியில் பிரதமரைத் தள்ளியுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றார்கள். ‘ஹார்ப்பர்’ தனது அலுவலகர்களில்  “பெரும்பாலானவர்கள்”  இத்திட்டம் பற்றி அறிந்திருக்கவில்லை என  வெள்ளிக்கிழமையன்று ஊடகவியலாளர்களது கேள்விக்குப் பதிலளித்திருந்தார்.

“கனடிய மக்களையும்,  பாராளுமன்றத்தையும் தவறாக வழிநடத்தியது” போன்ற காரியங்களில்  ஈடுபட்ட அலுவலகர்களை  “ஸ்டீபன் ஹார்ப்பர்” பதவி உயர்வு, அவர்களை பாதுகாத்தல் என்ற முறைமைகளின் மூலம் காப்பாற்ற முயல்வதாகக் கடுமையாகச் சாடினார் ”யஸ்ரின் ரூடோ”. இறுதியில் சம்மந்தப்பட்டவர்களைப் பிரதமர் பணிகளில் இருந்து விலக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

Share This Post