நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின் இறுதி முடிவுகள் இன்னும் வெளியாகாமையினால், தனது தோல்வியை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென மஹிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாகத் தனது ‘டுவிட்டர்’ கணக்கில் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதற்கு முன்னர் ஏ.எவ்.பி என்ற பிரபல்யம் வாய்ந்த சர்வதேச ஊடகமொன்றுக்கு மகிந்த ராஜபக்சா தோல்வியை ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.