இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக ஏ.எவ்.பி செய்திச் சேவை கூறியுள்ளது.ஆனாலும், தான் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தக் கூற்று மீண்டும் அடுத்த தேர்தலை இலக்காக வைத்து அவர் தனது செயற்திட்டத்தை நீண்ட கால அடிப்படையில் திட்டமிடுவதாகத் தெரிகிறது.
பிரதமராவதற்கான தனது கனவு மறைந்து போனது என்று அவர் கூறியதாக ஏ.எவ்.பி செய்திச் சேவை கூறியுள்ளது.”நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். கடும் போட்டியில் நாங்கள் தோற்றுவிட்டோம்” என்று அவர் தம்மிடம் கூறியுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.