ஐ.தே கட்சி ஆட்சி அமைக்க ஆறு ஆசனங்கள் தேவை

நடைபெற்று முடிந்த இலங்கையின் 15ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 95 ஆசனங்களையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி16 ஆசனங்களையும்,  மக்கள் விடுதலை முன்னணி 6 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

ஐ.தே.கட்சி ஆட்சியமைக்க இன்னும் ஏழு ஆசனங்கள் தேவை. மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ்  பிரதிநிதியையும் சேர்த்தால் மேலும் ஆறு  ஆசனம் ரணில் தலைமைக்குத் தேவைப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு நிபந்தனை அடிப்படையில் ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கலாம்.  அமைச்சர் பதவிகளை ஏற்க அவர்கள்  முன்வரமாட்டார்கள் என நம்பப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்ட  அதிகமான பிரதி நிதிகள்  ரணிலின் தலைமையில் தேசிய அரசாங்கம் எனும் பெயரில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு  ரணிலின்  ஆட்சி பெரும்பான்மைப் பலம் பெற உதவுவார்கள் என்று நம்பலாம்.

எனவே, ரணில் தலைமையிலான அரசு எந்தச் சிக்கலும் இன்றி அமைவதும் தேசிய அரசாங்கம் எனும் பெயரில் பதவிக்கு வருவதும் நடைபெற உள்ளது. ஜே,வி,பியும், மகிந்த தலைமையிலான அணியினரும் எதிர்கட்சி அரசியலை நடத்துவார்கள்.

 

Share This Post

Post Comment