ஒன்ராரியோ மாகாண லிபரல் அரசு தற்பொழுது அறிமுகப்படுத்த முனையும் ”ஒன்ராறியோ ஓய்வூதியத் திட்டம்” பற்றி மேலும் பல விவரங்களை வெளிப்படுத்தி வருகிறது. அதன் வெளிப்பாடாக இத்திட்டம் பற்றிய புதிய கருத்துக் கணிப்பு அத்திட்டம் குறித்த சாதகமான அபிப்பிராயம் மக்களிடம் ஏற்பட்டு வருவதாகதாகத் தெரிவிக்கிறது.
கடந்த வாரம், முதலமைச்சர் “காத்லீன் வெய்ன்’ அவர்களின் இப்புதிய ஒன்ராறியோ ஓய்வூதியத் திட்டத்தை (ORPP), பிரதமர் ”ஸ்டீபன் ஹார்ப்பர்” கடுமையாக விமர்சித்திருந்தார். மக்களுக்கு அது வரிச்சசுமையை மேலும் அதிகரிப்பதாக அமைகிறது எனச் சாடியிருந்தார். ஆனால் ‘யஸ்ரின் ரூடோ” தான் பிரதமராக வரும் பட்சத்தில் இத்திட்டத்துக்கு ஆதரவளிப்பேன் என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘காத்லீன் வெய்ன்’ கனடியப் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் “ரூடோ” அவர்களுக்காகக் கடுமையாக உழைத்து வருகிறார்.