லிபரலும், என்டிபியும் இணைந்த சிறுபான்மை அரசு ஒன்று அமைவதைக் கனடியப் பொதுமக்களில் பெரும்பான்மையோர் விரும்புவதாகக் கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கின்றது. ஒக்ரோபர் 19 நடைபெற உள்ள தேர்தலில் பழமைவாதக் கட்சியை முறியடிக்க பெரும்பாலான வாக்காளர்களால் (63%) என்டிபி மற்றும் லிபரல் கூட்டரசுக்கு ‘ஆதரவு’ (30% பெரிதாக / 33% ஓரளவு) வழங்க உத்தேசிக்கப்படுகிறது. இந்த நிலைப்பாடு பழமைவாதிகள் கட்சி அரசு அமைப்பற்கு மாற்றாக அமையும். ”குளொபல் நீயூஸ்” சார்பில் Ipsos நிகழ்த்திய கருத்துக்கணிப்பின் படியே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அத்தகைய கூட்டரசு ஒன்றினை அமைப்பதற்கான எத்தகைய முற்கூறல்களையும் இந்த இரு கட்சிகளின் தலைவர்களும் இது வரை சொல்லவில்லை.