‘கல்கேரி நோஸ் கில்’ தொகுதி ‘லிபரல்’ கட்சி வேட்பாளர் வெளியேறினார்

‘கல்கேரி நோஸ் கில்’ தொகுதி ‘லிபரல்’ கட்சி பெண் வேட்பாளர் Ala Buzereba (21 வயது) போட்டியிலிருந்து வெளியேறினார். பதின்ம வயதுகளில் ‘ருவிற்றர்” மூலம் அவர் வெளியிட்டிருந்த கருத்துகள் ஏற்படுத்திய சர்ச்சை மீண்டும் கொண்டு வரப்பட்டதால் அவர் போட்டியிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பழமைவாதக் கட்சியின் கோட்டையான ‘கல்கேரி நோஸ் கில்’ தொகுதியில் ”லிபரல்” தற்பொழுது கடும் போட்டியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அவ்வாறான சமயத்தில் இவ் வெளியேற்றம் எத்தகைய பாதிப்பை ”லிபரல்” கட்சிக்கு அந்தத் தொகுதியில் ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.

ஆரம்பத்தில் கட்சித் தலைவர் ‘யஸ்ரின் ரூடோ’  Ala Buzereba வின் சிறிய வயதுச் செயலுக்காக அவரைப் புறந்தள்ளவியலாது என்றும் தற்பொழுது அந்தத் தவறுகளிலிருந்து விடுபட்ட தகுதியான வேட்பாளர் எனவும் நியாயப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment