Day: August 23, 2015

சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு தேசியப் பட்டியலில் இடம் கிடைக்குமா ?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது இரண்டு தேசியப் பட்டியல் இடங்களில் ஒன்றைத், தமது கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு வழங்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் கோரியுள்ளது. அவர் ஒரு போரா.ளியாக இருந்து, பின்னர் ஜனநாயக நடைமுறைகளுக்கு திரும்பி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்களும் தொண்டாற்றியுள்ளார் என்று அக்கட்சியின் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளவருமான சிவசக்தி ஆனந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். வடக்கு இலங்கை மட்டுமன்றி, கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் அவர் தமிழ்…

உலகின் வேகமான மனிதராக மீண்டும் உசைன் போல்ட் !

பீஜீங்கில் நடைபெற்ற உலகத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டியில் 9.79 நொடிகளில் 100 மீட்டரை ஓடி உசைன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றார். அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் 9.80 நொடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒரே நேரத்தில் ஓடிய அமெரிக்காவின் ப்ரொமேல் மற்றும் கனடாவின் டெ கிராஸ் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை பெற்றனர். இந்த இருவரும் 100 மீட்டர் தூரத்தை 9.92 நொடிகளில் ஓடினர். அமெரிக்கரான மைக்கேல் ரோட்ஜர்ஸ் 9.94 நொடிகளில் ஓடி நான்காம் இடம் பெற்றார்.…