இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து முன்னர் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியிருந்தவருமான துரைரட்ணசிங்கம், மற்றும் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தவருமான சாந்தி சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் பெயர்கள் நியமனத்துக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த இருவரின் பெயர்களையும் அதிகாரபூர்வமாக இன்று காலை தேர்தல் ஆணையாளரிடம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலர் துரைராஜசிங்கம் சமர்ப்பித்துள்ளார். தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பாக, கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கட்சியின் உறுப்பினர்களை சந்தித்து உரையாடிய பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.