என்.டி.பிக் கட்சி ஆட்சி அமைக்கும் – புதிய கருத்துக் கணிப்பு

என்.டி.பிக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று புதிய கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது. அந்தக் கணிப்பின் பிரகாரம் 40 சத வீதமானவர்கள் என்.டி.பிக் கட்சிக்கும் 30 சத சத வீதமானவர்கள் லிபரல் கட்சிக்கும் 23 சத வீதமானவர்கள் கொன்சர்வேட்டிவ் கட்சியினருக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இந்தக் கணிப்பில் 1440 கனடியர்கள் பங்கெடுத்துள்ளனர். Forum Research என்ற நிறுவனமே இந்தக் கருத்துக் கணிப்பினை நடத்தியுள்ளது. இதன் படி என்.டி.பிக் கட்சி 174 ஆசனங்களை வெல்லக் கூடியதாக அமையும். கடந்த ஞாயிறும் திங்களும் இந்தக் கருத்துக்கணிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

சரிந்து வருகின்ற கனடியப் பொருளாதாரமும் செனட்டர் மைக் டவி வழக்கின் பொழுது வெளியான வாக்குமூலங்களும் ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு வீழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

Share This Post

Post Comment