இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை கொலை செய்ய முயற்சித்ததான குற்றச்சாட்டில் இருவருக்கு நீண்டகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.வேலாயுதன் வரதராஜா மற்றும் ரகுபதி சர்மா ஆகிய இருவருக்கும் தலா 290 மற்றும் 300 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த சிறை தண்டனைகள் முப்பது ஆண்டுகளில் கழிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார். போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ரகுபதி சர்மாவின் மனைவி வசந்தி விடுவிக்கப்பட்டுள்ளார். அதேவேளை…
Month: September 2015
அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதியுறும் சம்பூர் மக்கள்!

இலங்கையின் திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் 9 வருடங்களுக்குப் பிறகு மீள் குடியேறியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் தாமதம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலையும் விசனமும் வெளியிட்டுள்ளனர். சம்பூர் மக்கள் தாங்களாகவே அமைத்துக்கொண்ட குடில்களில்தான் தற்போது வசித்துவருகின்றனர். முந்தைய அரசாங்கத்தினால் சம்பூர் பிரதேசம் அரச முதலீட்டு வலயத்திற்கு என அடையாளமிடப்பட்டு மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டிருந்தன. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அது ரத்து செய்யப்பட்டு காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இருந்தபோதும் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லையென குற்றச்சாட்டுகள்…
கனடாவில் சுமந்திரன் ஆற்றிய உரையின் இன்னுமொரு சிறு பகுதி
கனடா பெரிய சிவன் ஆலயத்தில் சுமந்திரனின் பேச்சு
சர்வதேச நீதிப் பொறிமுறை கலந்த திட்டமே நல்லது – இந்தியா

இலங்கை முன்பிருந்த நிலையில் இருந்து ஒரு கடல் மாற்றம் போன்று மாறியுள்ளது. நீதிக்காக நாம் நிற்கி றோம். அதே நேரம் இலங்கையின் இறைமைக்கும் மதிப்பளிக்கின்றோம். போர்க்குற்றங்களை விசாரிக்க இலங்கை உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிப் பொறிமுறை கலந்த திட்டமொன்றை உருவாக்குவதே பொருத்தமாக அமையும். அது தான் அனைவருக்கும் வசதியானது என இந்தியா தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப் பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத்…
40 ஆயிரம் பொது மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும்!

இந்தியா உரிய நேரத்தில் தலையிட்டிருந்தால் இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பொது மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் சர்வதேச நீதிப் பொறிமுறைகைளைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றன. இந்தநிலையில், இலங்கை போர்க்குற்ற விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர்…
”பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி” நூல் வெளியீடு

உரை மு . பாக்கியநாதன் A . G யோகராஜா (சுவிஸ்) P . பேராதரன் காலம் : செப்டம்பர் 27 , பி .ப 4மணி இடம் : Don Montgomery Recreational Center 2467 Eglinton ave East Scarborough பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி என்ற நூலினை முன்வைத்து அதன் ஆசிரியர் என்.கே. ரகுநாதன் அவர்களுடன் இருத்தலும் உரைத்தலும் என்ற நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் அழைக்கின்றோம் . நிலவிலே பேசுவோம் தசமங்கலம்…
‘தாய் வீடு’ பத்திரிகையின் அரங்கியல் விழா

‘தாய் வீடு’ பத்திரிகையின் அரங்கியல் விழா எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நாலாம் தேதி மார்க்கம் தியேட்டரில் பிற்பகல் 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.
மலையகத்தில் மண் சரிவு நிகழ்த்திய அனர்த்தம்

இலங்கையின் மலையகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ரம்போட மண் சரிவில் 5000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. நுவரெலியா மாவட்டம் ரம்பொட பகுதியில் இடம்பெற்ற இந்த மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இரு பெண்களும் 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறார்களும் அடங்குவர். மண்சரிவு காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள குடும்பங்கள் தற்போது அந்த பகுதியிலுள்ள அரசாங்க பாடசாலையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த…
ஞாயிறன்று சுமந்திரன் கனடாவில் பேச உள்ளார்

தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன் அவர்கள் “சமகால இலங்கை அரசியல் நிலைமைகள் மற்றும் ஐ.நா மனித உரிமைப் பேரவைச் செயற்பாடுகள்” தொடர்பில் கனடாவில் சிறப்புரை ஆற்றுகின்றார். வரும் 27.09.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஸ்காபுரோ சிவன் கோவிலில் மேற்படி நிகழ்வு இடம்பெற உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடியப் பிரிவு அறிவித்துள்ளது.