இம்முறை அல்பேட்டா மாகாண வரவுசெலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை 5.88 பில்லியன்களாகும் எனக் கூறப்படுகிறது. மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி அல்பேட்டா மாகாணப் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைக்கிறது. ஒரு பீப்பாயின் மசகு எண்ணெயின் விலை 40 அமெரிக்க டொலர்களாகத் தற்பொழுது உலகச் சந்தையில் விற்கப்படுவது எண்ணெய் பொருளாதாரத்தில் ஏற்றம் கண்டிருந்த அல்பேட்டா மாகாணத்தை மேலும் சிக்கலுக்குள் தள்ளியுள்ளது.
கனடா முழுமைக்குமாக உற்பத்தித் துறையில் 4 இலட்சம் பேர் 2008 இலிருந்து இன்று வரையில் வேலை இழந்துள்ளனர் என்று என்.டி.பிக் கட்சித் தலைவர் அடித்துச் சொல்கிறார். இந்த வருட ஐப்பசியில் அல்பேட்டா மாகாண அரசு தனது வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்ற உள்ளது.