தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகத் தொழிற்பட முயற்சிப்பது தொடர்பில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸா உட்பட்ட பதினான்கு உறுப்பினர்கள், தற்போது எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துள்ளனர்.
இவர்கள் பதினாறு ஆசனங்களைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியிட்டுள்ளனர். இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை கோரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எதிர்க்கட்சி தலைமையை கோருவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ”உதய கம்மன்பில” கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் அது ஒரு வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பிராந்தியக்கட்சியாகும். அது நாட்டுக்கு புறம்பான வேலைத்திட்டத்தை கொண்டிருக்கிறது. இந்தநிலையில் ஏனைய எதிர்க்கட்சிகளை காட்டிலும் அதிக ஆசனங்களை கொண்டிப்பதைக்கொண்டு அதற்கு எதிர்க்கட்சி தலைமையை வழங்க முடியாது என்பது ”கம்மன்பிலவின்” வாதமாக உள்ளது.