ஆயிரம் அகதிகள் ஆஸ்திரிய எல்லையை நோக்கி நடை பயணம்

புடாபெஸ்ட் ரயில் நிலையத்தில் புறப்படுவதற்கு போதுமான ரயில்கள் இல்லாத நிலையில் சுமார் 1,000 குடியேறிகள் ஆஸ்திரிய எல்லையை நோக்கி நடக்கத் துவங்கியுள்ளனர்.

புடாபெஸ்டின் கெலெடி ரயில் நிலையத்தில் பல நாட்களாகக் காத்திருந்தும் போதுமான சர்வதேச ரயில்கள் இல்லாத நிலையில், 180 கி.மீ. தூரத்தை நடந்தே கடந்து ஆஸ்திரிய எல்லையை அடைய இவர்கள் முடிவுசெய்துள்ளனர்.

ஹங்கேரிய காவல்துறை இவர்களுடன் சென்றாலும், அவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவை நோக்கிச் செல்லும் சாலையில் சக்கர நாற்காலிகள், பெரிய பைகள் ஆகியவற்றுடன் ஒரு ஊர்வலத்தைப் போல இவர்கள் சென்றுகொண்டிருக்கின்றனர். சிலர் தங்களது கைகளில் ஜெர்மனியப் பிரதமர் ஏங்கலா மெர்கலின் படத்தை பிடித்திருந்தனர். முதலில் வியென்னாவிற்கும் பிறகு அங்கிருந்து ஜெர்மனிக்கும் செல்லவிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Share This Post

Post Comment