அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் உள்ள ரோவன் உள்ளூராட்சி மன்றத்தின் அதிகாரிகள் ஒருபால் உறவாளர்களுக்கான திருமண அனுமதியை வழங்கத் துவங்கியுள்ளனர். முன்னதாக, ஒருபால் உறவு திருமணத்துக்கான உரிமத்தை வழங்குவதற்கு மறுத்திருந்த உள்ளூராட்சி மன்றத்தின் அலுவலகர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார். சுவிசேஷ பிரசாரம் செய்தும் கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்த கிம் டேவிஸ் என்ற அந்த அலுவலகர், ஒருபால் திருமணத்தை அங்கீகரித்து நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை மீறியிருந்தார்.
தான் கடவுளின் அதிகாரத்தையே மதித்து நடப்பவர் என்றும் அவர் கூறியிருந்தார். அவர் வியாழனன்று சிறையில் அடைக்கப்பட்டார். அதனையடுத்து வேறு சில அதிகாரிகள் திருமண உரிமங்களை வழங்க ஒப்புக்கொண்டனர். அமெரிக்க உச்சநீதிமன்றம், ஒருபாலின திருமணங்களை சட்டபூர்வமானவை என்று கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.