கி.பி. அரவிந்தனை (சுந்தர், பிரான்ஸிஸ்) நினைவு கொள்ளல்

ஈழப்போராட்ட முன்னோடிகளில் ஒருவரும் இலக்கியப் படைப்பாளியும் தமிழ் அறிவியக்கத்தை முன்னிறுத்துவதற்காக செயற்பட்டவரும் ஊடகவியலாளருமான கி.பி. அரவிந்தன் (சுந்தர், பிரான்ஸிஸ்) அவர்களை நினைவு கொள்ளும் நிகழ்வு எதிர்வரும் 06.09.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு யாழ்ப்பாணம், 128, டேவிற் வீதியில் அமைந்திருக்கும் திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியற் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வில் பிரான்ஸிஸ் பற்றி (இளைஞர் பேரவைக்காலம்) அ. வரதராஜப்பெருமாள், தவராஜா ஆகியோரும் சுந்தர் பற்றி (ஈரோஸ் காலகட்டம்) கருணாகரன், சுகு ஸ்ரீதரனும்
கி.பி.அரவிந்தன் படைப்புகள் பற்றி (அவருடைய கவிதைகள் உள்ளடங்கலாக) கவிஞர் சோ. பத்மநாதனும்
கி.பி.அரவிந்தனின் ஊடகப்பணிகள் மற்றும் அரசியல் செயல்பாடுகள் பற்றி ஜபாரும்
புலம்பெயர் சூழலில் கி.பி அரவிந்தன் பற்றி அசுராவும் உரைக்கின்றனர்.தவிர, கி.பி அரவிந்தன் என்ற ஆளுமை பற்றி வேறு நண்பர்களும் உரையாற்றவுள்ளனர்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

– கலை, இலக்கிய, ஊடக செயற்பாட்டு அரங்க நண்பர்கள்

Share This Post

Post Comment