பாரிய மனித படுகொலைகள் இடம்பெற்றிருக்கும் – சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தேர்தலில் வெற்றியீட்டியிருந்தால் பாரிய மனித படுகொலைகள் இடம்பெற்றிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ இலங்கையில் காவல்துறை அரசாங்கமொன்றையே நடத்தி வந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவிகள் பலரை மஹிந்த படுகொலை செய்திருப்பார் என அவர் தெரிவித்துள்ளார். தமக்கும் தமக்கு நெருக்கமானவர்களுக்கும் எதிராக ஊழல் மோசடிகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்கவே மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி பீடம் ஏற முயற்சித்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவை விடவும் வேறும் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது எனவும் முதலீடு முதல் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் நீடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீன அபிவிருத்தித் திட்டங்களினால் நாட்டின் கடன் சுமை அதிகரித்தது எனவும்இ மஹிந்த தரப்பினர் தரகுப் பணத்தை அதிகளவில் பெற்றுக்கொண்டதே இதற்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸவை இந்தியா தோற்கடித்தது என்ற கூற்றில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வாழ் மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகளை உறுதி செய்யக்கூடியவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ பல்வேறு வழிகளில் தமக்கு நெருக்கடிகளை கொடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் காணிகளை மீள வழங்கவும், காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவும், அதிகாரப் பகிர்வினை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரங்களில் இந்தியா கத்திரமான பங்களி;ப்பனை வழங்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

(குளோபல் தமிழ் நியூஸ்)

Share This Post

Post Comment