ரசியாவை விமர்சிக்கும் ‘எட்வர்ட் ஸ்நோடன்’

அமெரிக்காவின் புலனாய்வுத் துறைக்காக முன்னர் பணியாற்றியிருந்த எட்வர்ட் ஸ்நோடன், கடந்த இரண்டு ஆண்டுகளாக தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள ரஷ்யாவில் இணையம் மற்றும் மனித உரிமைகள் மீது இருந்துவருகின்ற கட்டுப்பாடுகளை விமர்சித்துள்ளார்.

நார்வேயில் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்திற்கான விருதை ஏற்று, வீடியோ இணைப்பு மூலம் பேசியுள்ள ஸ்நோடன், ரஷ்ய அரசாங்கம் இணையத்தை மேலும் மேலும் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மக்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை மட்டுமன்றி, மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடைய விடயங்களையும் ரஷ்ய அரசாங்கம் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக ஸ்நோடன் கூறியுள்ளார்
எட்வர்ட் ஸ்நோடனை கைதுசெய்வதற்கான பிடியாணையை 2013-ம் ஆண்டில் அமரிக்கா பிறப்பித்தது.
அமெரிக்காவின் கண்காணிப்புத் திட்டம் தொடர்பில் ஆயிரக் கணக்கான ஆவணங்களை வெளியிட்டமை தொடர்பான விசாரணைக்காக அமெரிக்காவுக்கு அவர் தேவைப்படுகின்றார்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment