என்.டி.பிக் கட்சி ஆட்சிக்கு வந்தால் 46,000 சிரிய அகதிகளை நான்கு வருடங்களுக்குள் ஏற்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள். முதல் வருடத்துக்கு பத்தாயிரமும் நான்கு வருடங்களுக்கு 36,000 ஆகவும் (வருடத்துக்கு 9000 ஆயிரப்படி) சிரிய அகதிகள் எற்கப்படுவார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் என்டிபிக் கட்சியின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கான விமர்சகருமான ‘போல் டூவர்’ ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைக் கூறியுள்ளார். கார்ப்பர் தலைமையிலான பழமைவாதக் கட்சியின் மத்திய கிழக்கு அகதிகளுக்கான எற்பாடுகள், நடவடிக்கைள் குறித்துப் பல்வேறு விமர்சகர்கள் காட்டாமாக விமர்சித்துள்ளார்கள்.
லிபரல் கட்சி தாம் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் 25000 அகதிகளை எற்க உள்ளதாகவும் நூறு மில்லியன் டொலர்களைச் செலவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் நூறுமில்லியன்களை ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்திற்கு அளிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.