பழமைவாதக் கட்சியின் ஸ்காபுரோ-ரூஜ்பார்க், டண்வோர்த் தொகுதியின் வேட்பாளர்களான ‘ஜெரி பான்ஸ்’, ‘ரிம் டூராட்’ ஆகியோர் போட்டியிலிருந்து விலகியுள்ளனர் ‘ஜெரி’ வீட்டுத் திருத்த வேலைக்குப் போயிருந்த வேளையில் கிண்ணம் ஒன்றில் சிறுநீர் கழித்து சமையல் அறை ‘சிங்கினுள்’ கொட்டியிருந்தார். அதனை அவருக்குத் தெரியாமல் சி.பி.சி தொலைக்காட்சியினர் படம் எடுத்தது இப்பொழுது வெளியாகியுள்ளது. ‘ரிம்’ பலவீனமானவர்களையும் மனநிலை குன்றியவர்களையும் பகிடி செய்யும் வகையில் விளம்பரத் துண்டுபடங்களில் நடித்துள்ளார்.
இந்த இருவரினதும் நடவடிக்கைகள் பல வகைளிலும் கனடிய மாண்புகளையும் பண்புகளையும் சிறுமைப்படுத்துவதாக அமைவதால் பழமைவவாதக் கட்சியைப் பாதிப்படைய வைத்துள்ளது.எனவே விமர்சனங்களை கட்டுக்குள் கொணரும் பொருட்டு இருவரும் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
.