செர்பியாவில் 8 பேர் மீது போர் குற்றம்

செர்பியாவில் 8 பேர் மீது போர் குற்றம்

1999ல் பொஸ்னியாவில் உள்ள ஸ்ரெப்ரெனிட்சாவில் நடந்த படுகொலைகள் தொடர்பாக, செர்பியாவில் 8 பேர் மீது போர் குற்றம் புரிந்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரிய படுகொலை சம்பவமாக ஸ்ரெப்ரெனிசா படுகொலை பார்க்கப்படுகிறது. இந்த எட்டுப் பேருமே பொஸ்னிய – செர்பிய சிறப்புக் காவல்படையைச் சேர்ந்தவர்கள்.
நூற்றுக்கணக்கான பொஸ்னிய குடிமக்களை க்ரெவிகா என்ற நகரில் உள்ள ஒரு கிடங்குக்கு அழைத்துச்சென்று, எந்திரத் துப்பாக்கிகளாலும் கையெறி குண்டுகளாலும் கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
இந்தப் படுகொலை தொடர்பாக செர்பிய நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.

பெல்கிரேடிலும் சரயெவோவிலும் இருக்கும் போர்க் குற்ற நீதிமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு நடவடிக்கையைடுத்து இவர்கள் கடந்த மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்டனர். ஸ்ரெப்ரெனிட்சா படுகொலைகளின்போது போஸ்னிய செர்பியப் படையினர் சுமார் எட்டாயிரம் ஆண்களையும் சிறுவர்களையும் கொலைசெய்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான படுகொலையாக இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment