இன்று “போப்” அமெரிக்கா செல்கிறார்

இன்று “போப்” அமெரிக்கா செல்கிறார்

அமெரிக்கா மற்றும் க்யூபாவுக்கு பத்து நாட்கள் பயணமாக போப் பிரான்சிஸ் இன்று செல்கிறார்.அமெரிக்க-க்யூப உறவுகள் மேம்பட போப் பிரான்சிஸ் நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.இதுவரை அந்த இரு நாடுகளுக்கும் போப் பிரான்சிஸ் சென்றதில்லை.

அவர் போப்பாக பதவியேற்ற பிறகு, எதிரிகளாக இருந்த அமெரிக்காவும் க்யூபாவும் உறவுகளை மேம்படுத்திக்கொள்ள குறிப்பிடத்தக்க அளவுக்கு பங்காற்றினார்.ஏழைகளின் நலன்களை முன்னெடுக்கும் போப் பிரான்சிஸ், அமெரிக்காவின் ஏகாதிபத்திய நடைமுறைகளை விமர்சிப்பவர் என்பதால், க்யூபாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ரவுல் காஸ்ட்ரோவால் மதிக்கப்படுகிறார்.

எனினும் அமெரிக்கா தொடர்பான அவரது நிலைப்பாடு காரணமாக அங்கு அவர் அதிருப்தியாளர்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது.இதனிடையே வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க அதிபர் ஒபாமா, க்யூப அதிபர் காஸ்ட்ரோவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக க்யூபா மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ள அமெரிக்கா, அதைத் தளர்த்துவதற்கு மேலும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்த பிறகு இரு தலைவர்களும் உரையாடியுள்ளனர்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment