கிரேக்க பொதுத்தேர்தலில் மீண்டும் சிரிஸா கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில், புதிய கூட்டணி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் பிரதமராக வரவுள்ள அலக்ஸிஸ் சிப்ராஸ் ஈடுபட்டுள்ளார்.
இந்தத் தேர்தல் வெற்றி, கிரேக்க பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு ஒரு மக்கள் ஆணையை தந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.அவருக்கு உடனடியான இரு சவால்கள் இருக்கின்றன. புதிய கடன் மீட்பு திட்டத்துக்கான நிபந்தனைகளான கடுமையான மறுசீரமைப்புக்களை அமல்படுத்தியாக வேண்டும்.
அடுத்தபடியாக, ஐரோப்பாவுக்குள் அகதிகளும் குடியேறிகளும் நுழைந்துவரும் நிலையில், அந்த விடயத்தில் கிரேக்கத்தின் பங்களிப்பில் கவனத்தை செலுத்தியாக வேண்டும்.கிரேக்க மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சிப்ராஸுடன் இணைந்து செயற்பட தாம் தயாராக இருப்பதாக ஐரோப்பிய வலய நிதி அமைச்சர்களின் தலைவர் கூறியுள்ளார்.