“ஹஜ்” யாத்திரை தொடங்கியது

“ஹஜ்” யாத்திரை தொடங்கியது

உலகெங்கிலிருந்தும் பல லட்சக்கணக்கான முஸ்லீம்கள் புனித ஹஜ் யாத்திரைக்காக சௌதி அரேபியா செல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.புனித நகரான மெக்காவை மையமாக வைத்து நடத்தப்படும் இந்தச் சடங்கு இஸ்லாமிய நாட்காட்டியில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஏறக்குறைய 20 லட்சம் முஸ்லீம்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கையில்தான், சமீபத்தில் மெக்காவில் பெரிய பள்ளிவாசலின் மீது ஒரு பெரும் கட்டுமான கிரேன் விழுந்து நொறுங்கியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment