இலங்கையில் மனித உரிமைகள் விவாகரம் தொடர்பாக எந்தவொரு விசாரணை நடத்தப்பட்டாலும் அது நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டுமென ஜாதிஹ ஹெல உருமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் செய்தியாளர் மாநாடு கொழும்பு நகரில் இன்று நடைபெற்றது.
அந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கட்சியின் பிரதான செயலாளரும், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சருமான பட்டளிய சம்பிக்க ரணவக்க, சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதியின்படி கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சமர்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்
மேலும், எல்.எல்.ஆர்.சி அறிக்கை, காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான மேக்ஸ்வெல் பரணகம ஆணையம் அளித்த அறிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென ரணவக்க தெரிவித்தார்.
இராணுவத்தினரை மீண்டும் விசாரணைக்குட்படுத்தப்போகிறார்கள் என்று பரவிவரும் தகவலை கேட்டு யாரும் அச்சம்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
மேலும் புலிகளுக்கு நிதி வழங்கியவர்கள், வாகனங்களை விநியோகித்தவர்கள், ஆலோசனை வழங்கியவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்றும் சம்பிக்க ரணவக்க கூறினார்.
(பிபிசியில்)