அமெரிக்கா முன்வைத்த யோசனைக்கு ரணில் ஆதரவு!

அமெரிக்கா முன்வைத்த யோசனைக்கு ரணில் ஆதரவு!

அமெரிக்கா முன்வைத்த யோசனைக்கு இனை அனுசரணை வழங்கத் தயார் : பிரதமர் ரணில்
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைத்த இலங்கை தொடர்பான யோசனைக்கு இணை அனுசரணை வழங்க தயார் என பிரமதர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இரவு இடம்பெற்ற சிமா கற்கை நெறியின் 50 ஆவது ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் நாடளாவிய ரீதியில் சிறப்பாக விளங்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா, மகேடோனியா, மொன்ரென்ஜிரோ, லண்டன் மற்றும் வட அயர்லாந்து ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து A/HRC/30/L.29 இலக்கத்திலான ‘நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை இலங்கையில் நிலைநாட்டுதல்’ எனும் தலைப்பினை கொண்ட பிரேரணையை சமர்ப்பித்துள்ளது.

இந்த யோசனையில் மூலம் இலங்கை தொடபில் இதுவரை காலம் இருந்து வந்த அழுத்தம் குறைவடைந்துள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார். அதுபோல் இந்த யோசனையின் மூலம், இலங்கைக்கு எதிர்காலம் தொடர்பிலான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில், இலங்கைக்குள்ளான நீதிமன்ற செயற்பாடு கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கமைய, விசேட சட்டத்தரணிகளைக் கொண்ட நிர்வாகம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் அதனூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பொதுநலவாய நாடுகள் சபை, சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்திலுள்ள சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும் எனவும் அதற்கான அனைத்து சட்டங்களும் இலங்கையில் நிறைவேற்றப்படும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து நடவடிக்கைகளும் இலங்கை அரசியலமைப்பிற்கு அமைய முன்னெடுக்கப்படும் என சுட்டிக்காட்டிய பிரதமர், அரசியல் தீர்விற்குச் செல்லவும் அதற்குத் தேவையான அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வரவும் இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

(யாழ் உதயன்)

Share This Post

Post Comment