Month: October 2015

இலங்கைக் கடலில் மீன் பிடிக்கும் உரிமை ?

கணன் சுவாமி அறிக்கை! இலங்கை கடலில் இந்திய மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமை உடையவர்கள். இந்திய கடலில் இலங்கை மீனவர்களும் பாரம்பரிய ரீதியிலான மீன்பிடி உரிமை உடையவர்கள். கடந்த கூடங்குள அணுஉலை ஆரம்பத்தின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய கடல்பகுதியில் இலங்கை மீனவர்களுக்கு இருந்த பாரம்பரீய மீன்பிடி உரிமையை இந்திய அரசு ரத்து செய்ய விரும்பியது. பேச்சுவார்த்தையின் முடிவில் இந்திய இலங்கை கடலில் இருந்த இந்திய இலங்கை மீனவர்களுக்கான பாரம்பரிய மீன்பிடி உரிமையை இரு நாடுகளும் ரத்து…

தமிழ் கைதிகள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ?

இலங்கையில் முறையான சட்டங்கள் இருக்கின்ற போதிலும், நீதிமன்றங்களில், வழக்குகள் பத்து வருடங்களுக்கு மேல் இழுத்தடிக்கப்படுகின்ற வேடிக்கை நிகழ்வதாக, சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன சனியன்று யாழ்ப்பாணத்தில் கூறியிருக்கின்றார். புதிதாக திறக்கப்பட்ட யாழ் சிறைச்சாலை சிறைச்சாலைகள் திணைக்களத்தினால், யாழ்ப்பாணத்தில் 272 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கட்டிடத்தை வைபவரீதியாகத் திறந்து வைத்த பின்னர், உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில்…

ரஷ்ய விமானம் 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானது

ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானது. அதில் எவரும் உயிர் தப்பவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. சினாய் வளைகுடா பகுதியில் மீட்புக் குழுக்கள் விமான சிதிலங்களை கண்டுள்ளன. பல ஆம்புலன்ஸுகள் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளன. செங்கடல் கடற்கரை சுற்றுலா நகரான ஷரம் எல் ஷெய்க்கில் இருந்து அந்த விமானம் செயிண்ட் பீற்றர்ஸ்பேர்க்குக்கு பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நடந்துள்ளது. பயணிகளில் பெரும்பாலானவர்கள் ரஷ்ய சுற்றுலா பயணிகள் ஆவர். ரஷ்ய விமான நிறுவனமான…

அமெரிக்கச் சிறைகளிலிருந்து 6000 கைதிகள் விடுதலை

அமெரிக்கச் சிறைகளில் இருக்கும் சுமார் ஆறாயிரம் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடைமுறையை அமெரிக்க நீதியமைச்சகம் துவங்கியிருக்கிறது. இவர்கள் போதைமருந்து தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள். அமெரிக்கச் சிறைகளில் இருக்கும் அதிகப்படியான கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முகமாக இந்த கைதிகளின் விடுதலை முன்னெக்கப்படுகிறது. அமெரிக்க வரலாற்றில் இந்த அளவுக்கு பெருமளவிலான கைதிகள் இதுவரை ஒரே சமயத்தில் விடுவிக்கப்படுவது இதுவே முதல்முறை. வன்முறை தொடர்பற்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களின் சிறைவாசத்தைக் குறைப்பதற்கு அரசு எடுத்த முடிவின் விளைவாக இவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.அமெரிக்க…

வங்க தேசத்தில் மதச்சார்பற்றவர்கள் மீது தாக்குதல்

முன்னர், கொலை செய்யப்பட்ட மதசார்பற்ற பதிவர் அவ்ஜித் ராயின் நெருங்கிய நண்பரும் வெளியீட்டாளருமான அஹ்மெடுர் ரஷித் டுடுலின் அலுவலகத்துக்குள் ஆயுதம் ஏந்திய நபர்கள் புகுந்து அவரையும் மற்றும் இருவரையும் கத்தியால் குத்தினார்கள். ஏனைய இருவரில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. மற்றொரு வெளீயீட்டாளர், பைஸல் அரெபின் திபொன், நகரத்தின் மற்றொரு இடத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார். டாக்காவில், ராய் என்பவர் கடந்த பெப்ரவரி மாதம் இஸ்லாமியவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் கொலை செய்யப்பட்ட பின்னர் மதசார்பற்றவர்களுக்கு எதிராக வங்கதேசத்தில் தொடர்ச்சியாக…

பாலஸ்தீன இஸ்ரேலிய மோதல்!

இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. இஸ்ரேலியப் பிரஜைகள் மீது நடந்த பல தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேல் தனது ராணுவத்தை இந்த வாரம் ஜெருசலேத்தின் வீதிகளில் நிறுத்தி , நகரின் சில பகுதிகளுக்குள் நுழையத் தடை விதித்தது. இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் பாலஸ்தீனர்கள் சிலரின் உயிர்களையும் பலிவாங்கிவிட்டன. இந்த வன்முறை மீண்டும் வெடித்திருப்பதை, பலர் ஒரு புதிய “இன்டிஃபாடா” ( எழுச்சி என்பதற்கான அரபு வார்த்தை) உருவாவகக் கூடும் என்று…

யாழ் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்!

வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் இன்று ( வெள்ளிக்கிழமை) நிறைவடைகையில், யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள், அந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், தங்களுக்கு நியாயம் வழங்குவதற்கு ஆணைக்குழு நியமிக்க வேண்டும் எனக்கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றார்கள். யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கண்டன வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும், கோரிக்கை வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் ஏந்தியிருந்தனர். இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் சரியான முறையில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் கோரியிருக்கின்றார்கள். வடமாகாணத்தில்…

ஸ்ராலின் ஆட்சியில் சித்திரவதை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி!

முந்தைய சோவியத் ஒன்றியத்தில் ‘குலக்’ முகாம்கள் என்றழைக்கப்பட்ட கடூழிய முகாம்களில் சித்ரவதை செய்யப்பட்ட பல லட்சக்கணக்கானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதிய அருங்காட்சியகம் ஒன்று மாஸ்கோ நகரில் திறக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அரசே உருவாக்கியிருக்கும் இந்த அருங்காட்சியகம், சோவியத் சர்வாதிகாரி, ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்காலத்தில், குறிப்பாக, 1930லிருந்து 1950 வரையிலான காலகட்டத்தில், கொல்லப்பட்டவர்களை நினைவூட்ட தேசிய மட்டத்தில் அனுசரிக்கப்பட்ட நினைவு தினத்தையொட்டி திறக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, கே.ஜி.பி ரகசியப் போலிசின் முந்தைய தலைமையகமான லுப்யங்கா அருகே , ஆயிரக்கணக்கில் பலியானோரின்…

ஹார்ப்பர் ஏன் தோற்றார் ?

1992 ஆம் ஆண்டு பில் கிளின்ரன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வெற்றிகரமான தேர்தல் பிரச்சார உத்தியைத் திட்டமிட்ட அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் சூத்திரதாரியான ஜேம்ஸ் கார்வில்லி, “அட அபத்தமே, பொருளாதாரமே காரணி” என்ற புகழ்பெற்ற வாசகத்தை உதிர்த்தது பலருக்கும் நினைவிருக்கலாம். 1992 ஆம் ஆண்டைப் பொருத்தவரையில் அது உண்மையாக இருக்கலாம். ஆனால், எட்டு ஆண்டுகள் கழித்து, குடியரசுக் கட்சியின் சூத்திரதாரியான கார்ல் ரோவ், கடும் பிளவுகளைக் கொண்ட விழுமியங்கள் சார்ந்த பிரச்சினைகளின் அடிப்படையில் ஜார்ஜ் புஷ் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உதவி…

மகிந்தா மற்றும் கோத்தபாயா ஆகியோர் மீது நடவடிக்கை இல்லை!

ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தாலும், அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோர் தண்டிக்கப்படமாட்டார்கள் என அரசு இன்று அறிவித்துள்ளது. அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் அரசின் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அண்மையில் ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேறிய பிறகு முதல் முறையாக தேசிய அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதைத் தெரிவித்துள்ளது.…