எக்னெலிகொடா பற்றிய இராணுவமுகாம் குறித்த விசாரணை

எக்னெலிகொடா பற்றிய இராணுவமுகாம் குறித்த விசாரணை

 

காணாமல் போன ஊடகவியலாளர் எக்னெலிகொடா பற்றிய இராணுவ முகாம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2010ல் காணாமல் போன இலங்கை ஊடகவியலாளர், பிரகித் எக்னெலிகொடாவை தடுத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் கிரித்தலை ராணுவ முகாம் குறித்து விசாரணை நடத்த நீதிமன்ற அனுமதி பெறப்பட்டிருப்பதாக, இலங்கை போலிஸ் திணைக்களம் கூறுகிறது.

இது வரை இந்த விசாரணை தொடர்பாக 11 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக போலிஸ் திணைக்கள அறிக்கை கூறுகிறது.

இதில் கிரித்தலை ராணுவ முகாமில் பணியாற்றிய ராணுவ அதிகாரிகளும் அடங்குவதாகவும், அவர்களை சம்பந்தப்பட்ட ராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் போலிசார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக ஹோமாகம மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் இதன்படி, இம்மாதம் மூன்றாம் வரையிலான காலப்பகுதிக்குள், சந்தேக நபர்களை சம்பந்தப்பட்ட முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொள்ள நீதிபதி அனுமதி வழங்கியிருப்பதாகவும் போலிசார் கூறுகின்றனர்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment