ஒலிம்பிக்கில் மேலும் ஐந்து புதிய விளையாட்டுகள்

ஒலிம்பிக்கில் மேலும் ஐந்து புதிய விளையாட்டுகள்

ஸ்கேட் போர்டிங், சர்ஃபிங், பேஸ்பால், ஸ்போர்ட் கிளைம்பிங் மற்றும் கராத்தே ஆகியவை அந்த ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஏற்கனவே இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 18 விளையாட்டுகளுக்கு அப்பாற்பட்டு இந்த ஐந்து விளையாட்டுகளும் இப்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

எனினும் இந்த ஐந்து போட்டிகள் குறித்த இறுதி முடிவு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் போது எடுக்கப்படும்.புதிதாகச் சேர்க்கப்படும் நோக்கில் எட்டு விளையாட்டுகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன.ஆனால் பரிந்துரைக்கப்படும் வாய்ப்பை பௌலிங், ஸ்குவாஷ் மற்றும் வூஷூ ஆகியவை பெறவில்லை.இருந்தாலும் ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்குவாஷ் விலையாட்டைச் சேர்க்க தமது முயற்சிகள் தொடரும் என சர்வதேச ஸ்குவாஷ் சம்மேளனம் மீண்டும் கூறியுள்ளது.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment