நோபல் பரிசு பெறும் கனடிய விஞ்ஞானி ‘ஆர்தர் மக்டொனால்ட்’

நோபல் பரிசு பெறும் கனடிய விஞ்ஞானி ‘ஆர்தர் மக்டொனால்ட்’

இந்த ஆண்டுக்­கான பௌதிகத்­திற்கான நோபல் பரிசு ஜப்­பானைச் சேர்ந்த தகாகி கஜிதா மற்றும் கன­டாவைச் சேர்ந்த ஆர்தர் மக்­டொனால்ட் ஆகி­யோ­ருக்கு செவ்­வாய்க்­கி­ழமை வழங்­கப்­பட்­டுள்­ளது.

புதி­ராக விளங்கி வரும் அணுவின் அடிப்­படைத் துக­ளான நியூ­தி­ரி­னோக்கள் தொடர்­பான மர்­ம­மொன்­றுக்கு தீர்வு கண்­ட­மைக்­கா­கவே அவர்­க­ளுக்கு இந்தப் பரிசு வழங்­கப்­பட்­டுள்­ளது. நியூத்­தி­ரி­னோக்­க­ளுக்கு திணிவு இருப்­பதை தீர்­மா­னிக்க உத­வு­வ­தற்­காக இந்த இரு பௌதி­க­வி­ய­லா­ளர்­களும் பணி­யாற்­றி­யுள்­ள­தாக மேற்­படி பரிசு தொடர்­பான அறி­விப்பைச் செய்­துள்ள ரோயல் சுவீடிஸ் விஞ்­ஞான அக்­க­டமி தெரி­விக்­கி­றது.

அவர்­க­ளது கண்­டு­பி­டிப்­பா­னது பொருட்­களின் உள்­ள­டக்­கங்கள் தொடர்பில் எமது புரிந்­து­ணர்வை மாற்­றி­யுள்­ள­துடன் பிர­பஞ்சம் தொடர்­பான எமது கண்­ணோட்­டத்­திற்கு முக்­கிய சான்­றா­கவும் உள்­ளது என மேற்­படி நிறுவனம் குறிப்­பிட்­டுள்­ளது. அத்­துடன் மேற்­படி கண்­டு­பி­டிப்பு, துணிக்­கைகள் தொடர்­பான எண்­ணக்­கரு மாதி­ரிகள் மற்றும் பிர­பஞ்ச சக்­திகள் என்­பன சம்­பந்­த­மாக ஏற்­க­ன­வே­யுள்ள நியம மாதி­ரி­க­ளுக்கு சவால் விடுப்­ப­ன­வாக உள்­ளன.

சூரிய ஒளிர்வை ஏற்­ப­டுத்தும் செயற்­கி­ர­மங்கள் போன்ற அணுத் தாக்­கங்­களின் பெறு­பே­றாக உரு­வாக்­கப்­படும் பாரம் குறைந்த நடு­நி­லை­யான துணிக்­கை­க­ளாக நியூத்­தி­ரி­னோக்கள் விளங்­கு­கின்­றன. புரோத்­தோன்­க­ளுக்கு அடுத்­த­தாக பிர­பஞ்­சத்தில் ஏரா­ள­மாகக் காணப்­படும் துணிக்­கை­ளாக அவை உள்­ளன.

இந்தத் துணிக்­கையின் இருப்பு குறித்து 1930 ஆம் ஆண்டில் பரீட்­சார்த்­த­மாக பிரே­ரிக்­கப்­பட்ட போதும், அது குறித்து 1950 களில் அணு தாக்­கங்­களின் போது துணிக்­கைகள் விடு­விக்­கப்­பட்ட சந்­தர்ப்­பத்­தி­லேயே நிரூ­பிக்­கப்­பட்­டது. இதற்கு முந்­திய விதிகள் நியூத்­தி­ரி­னோக்கள் திணி­வற்­றவை எனத் தெரி­வித்­தன.

ஆனால் ஜப்­பானைச் சேர்ந்த கஜிதா மற்றும் கன­டாவைச் சேர்ந்த மக்­டொனால்ட் ஆகி­யோரைத் தலை­மை­யாகக் கொண்ட குழு­வி­னரால் வெவ்­வே­றாக மேற்­கொள்­ளப்­பட்ட பரி­சோ­த­னைகள், அந்தத் துணிக்கைள் திணிவைக் கொண்­டுள்­ளன என்­பதை நிரூ­பிப்­ப­தாக அமைந்­தன. பல நியூத்­தி­ரி­னோக்கள் சூரி­ய­னி­லி­ருந்து எதிர்மின் நியூத்­தி­ரி­னோக்­க­ளாக காலப்­பட்டு முவன் நியூத்­தி­ரி­னோக்­க­ளா­கவும் ரோ நியூத்­தி­ரி­னோக்­க­ளா­கவும் மாறு­வதை மேற்­படி இரு பெள­தி­க­வி­ய­லா­ளர்­களும் கண்­ட­றிந்­துள்­ளனர்.

பௌதி­க­வியல் விதி­களின் கீழ் நியூத்­தி­ரி­னோக்கள் திணிவைக் கொண்­டி­ருந்தால் மட்­டுமே இந்த மாற்றம் சாத்­தி­ய­மாகும். இந்­நி­லையில் இந்தப் பெள­தி­க­வி­ய­லா­ளர்­களின் கண்­டு­பி­டிப்பு துணிக்­கைகள் தொடர்­பான பௌதி­க­வி­ய­லுக்கும் எமது பிர­பஞ்சம் தொடர்பில் அறிந்து கொள்­வ­தற்கும் முக்­கி­ய­மா­ன­தாக உள்­ள­தாக நோபல் சபை தெரி­விக்­கி­றது.

ஆழ­மான இர­க­சி­யங்கள் சம்­பந்­த­மான இந்தக் கண்­டு­பி­டிப்பு பிர­பஞ்­சத்தின் தோற்றம், வர­லாறு மற்றும் எதிர்­காலம் தொடர்­பான எமது தற்­போ­தைய புரிந்­து­ணர்வை மாற்­று­வ­தாக உள்­ள­தாக நோபல் சபையின் நடு­வர்கள் குழு­வினர் தெரி­விக்­கின்­றனர். கஜி­தாவும் மக்­டொ­னால்ட்டும் 8 மில்­லியன் சுவீடன் குரோனர் (950,000 அமெ­ரிக்க டொலர்) பெறு­ம­தி­யான நோபல் பரிசுத் தொகையை தம்­மி­டையே பங்­கீடு செய்­ய­வுள்­ளனர். முதல் நாள் திங்­கட்­கி­ழமை மருத்­து­வத்­துக்­கான நோபல் பரிசு அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த ஆண்­டுக்­கான மருத்­து­வத்­துக்­கான நோபல் பரிசை சீனாவைச் சேர்ந்த டு யூயூ, அயர்­லாந்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட அமெ­ரிக்­க­ரான வில்­லியம் கேம்பல், ஜப்­பானைச் சேர்ந்த சதோஷி ஒமுரா அகியோர் வென்­றி­ருந்­தனர்.

வில்­லியம் கேம்பல் மற்றும் சதோஷி ஒமுரா ஆகி­யோ­ருக்கு ஒட்­டுண்­ணி­யான உருளைப் புழுக்­களை முறி­ய­டிக்கும் புதிய சிகிச்சை முறை­மையை கண்­டு­பி­டித்­த­தற்­கா­கவும் டு யூயூ­வுக்கு மலே­ரியா நோயை முறி­ய­டிப்­ப­தற்­கான புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்ததற்காகவும் இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை இரசாயனத்துக்கான நோபல் பரிசு தொடர்பிலும் நாளை வியாழக்கிழமை இலக்கியத்துக்கான நோபல் பரிசு தொடர்பிலும் அறிவிக்கப்படவுள்ளது.

சமாதானத்துக்கான நோபல் பரிசு குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. அதேசமயம் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

Share This Post

Post Comment