இலவசமாக எதிர்பார்ப்பதில்லை – இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ்

இலவசமாக எதிர்பார்ப்பதில்லை – இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ்

இலங்கை மற்றைய நாடுகளுக்குள்ளே அவர்களுடைய உதவிகளை எதிர்ப்பார்க்காது, நமது இந்திய தேசத்தில் இருந்து தான் கூடுதலான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் கூறினாலும், கூறாவிட்டாலும் இது ஒரு உண்மையான விடயம், என்றாலும் அவர்கள் எதனையும் இலவசமாக எதிர்பார்ப்பதில்லை என்று யாழ்.இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ் தெரிவித்தார்.

இன்றைய தினம் இந்திய வர்த்தகத்தினை மேம்படுத்தும் விசேட மாநாடு யாழில் இடம்பெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எமது இந்திய தேசம் வர்த்தகத்திலும் சரி,பொருளாதாரத்திலும் வேகமாக உயர்ந்து சென்றாலும் எமது அண்டை நாடான இலங்கையும் முன்னேற வேண்டும்.

இலங்கை குறிப்பாக வட-கிழக்கு மாகாணம் நீண்ட போரிற்குப் பின்னர் மக்கள் அமைதியான,சுமூகமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.அவர்களுக்கு நாமும் ஒத்துழைப்பு வழங்கி பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தால் மாகாணம் வளர்ச்சியடையும்.

எனவே இலங்கை உயர்வு நம் உயர்வு என்று சிந்தித்தால் இந்த பிராந்தியம் மென்மேலும் வளர்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்தார்.

(யாழ் உதயன்)

Share This Post

Post Comment