மகிந்தாவுக்கு ஆணைக்குழு முன் வாக்குமூலம் அளிக்க அழைப்பு!

மகிந்தாவுக்கு ஆணைக்குழு முன் வாக்குமூலம் அளிக்க அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது.பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம்  குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு மஹிந்தவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் (15.102015)  காலை 9.00 மணிக்கு ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார விளம்பரங்களுக்கான கட்டணத்தை செலுத்தாமை தொடர்பில் வாக்கு மூலமொன்றை பதிவு செய்ய ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இல்லத்திற்கு சென்று, ஆணைக்குழுவின் அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர். எவ்வாறெனினும் நாளை மஹிந்த ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாவதாக உறுதியளித்துள்ளார் என ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment