அமெரிக்காவைவிட அதிகளவான பெரும்-செல்வந்தர்களைக் கொண்ட நாடாக சீனா முதல்தடவையாக மாறியுள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
‘டாலர் பிலியனர்கள்’ என்று வர்ணிக்கப்படும், 100 கோடி டாலருக்கு மேல் சொத்து வைத்துள்ள பெரும் செல்வந்தர்கள் 596 பேர் சீனாவில் இருப்பதாக ஷங்காயை தளமாகக் கொண்டு இயங்கும் ஹுருன் ஆய்வுநிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது.
அதாவது, அமெரிக்காவை விட 59 பெரும்-செல்வந்தவர்கள் சீனாவில் உள்ளனர்.சீனாவின் மந்தகதியில் உள்ள பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியிலும், மிகப் பெரும் செல்வந்தர்களின் எண்ணிக்கை அங்கு வளர்ந்துகொண்டே வருகின்றது.
இதேநேரம், சொத்துக்களின் பெறுமதியை மதிப்பிடுவதில் உள்ள சிரமம் காரணமாக, அங்குள்ள பெரும் செல்வந்தர்களின் எண்ணிக்கை தற்போதுள்ளதை விட இரட்டை மடங்காக இருக்கலாம் என்று ஹுருன் அறிக்கை நம்புகின்றது.
(பிபிசி தமிழோசை)