முதலமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்வர்

மாகாண முதலமைச்சர்கள் இரண்டு மாதங்களுக்கொரு தடவை அமைச்சரவை கூட்டங்களில் கலந்து கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது என அமைச்சரவை ஊடகப்பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில், மாகாணசபை பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஏற்ப இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதேபோல் நாடாளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் தலைவர்களும் இதேபோன்று இரு மாதங்களுக்கு ஒரு தடவை அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கோரிக்கைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(யாழ் உதயன்)

Share This Post

Post Comment