துருக்கிக்கு பெரிய அளவிலான ஐரோப்பிய உதவித் தொகை கிடைப்பது மற்றும், துருக்கிய பிரஜைகள் ஐரோப்பாவுக்குள் செல்வதற்கான விசா முறை தளர்த்தப்படுவது போன்ற சலுகைகளுக்கு பிரதிபலனாக ஐரோப்பா செல்ல முயலும் குடியேறிகளைத் தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுப்பதற்கு துருக்கி சம்மதித்துள்ளது.
பிரஸ்ஸல்ஸில் வியாழன் பின்னிரவில் நடந்த கூட்டத்தின் முடிவில் கூடுதலாக ஒத்துழைக்கும் திட்டத்துக்கு ஐரோப்பியத் தலைவர்களும் ஆதரவளித்துள்ளனர்.
குடியேறிகளை நிறுத்துவதில் முன்னேற்றம் காண்பதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் துருக்கியப் பிரஜைகள் விசா இல்லாமல் வருவதை அனுமதிக்கும் திட்டத்தை துரிதப்படுத்துவதற்கும் இடையில் வெளிப்படையான தொடர்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் கூறியுள்ளார்.
யுத்தத்திலிருந்து தப்பித்து துருக்கி வரும் சிரியாவின் மக்களை தங்கவைத்துக்கொள்வதறான மூன்று பில்லியன் டாலர் யூரோக்கள் அளவான நிதியுதவி வழங்குவது பற்றியும் ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலிக்கிறது.
(பிபிசி தமிழோசை)