Day: October 17, 2015

16.10.2015 சனிக்கிழமையன்று Don Montgomery சமூக நிலையத்தில் நடைபெற்ற ‘டேவிட்’ ஐயா நினைவேந்தல் நிகழ்வில் ‘நக்கீரன்’ ஆற்றிய உரையின் ஒரு பகுதி!

ஸ்காபுரோ சிவிக் சென்ரரில்17.10.2015 சனிக்கிழமை பிற்பகல் 3.00 – 6.00 மணி வரை காலம் சென்ற பாலாதம்பு(தொழிற்சங்கத் தலைவர்) , சீலன் கதிர்காமர் ஆகியோரின் வாழ்வினை நினைவு கூரும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் கூட்ட அமைப்பாளர் இரட்ணம் கணேஸ் ‘நாளை’ இணையத்துக்கு வழங்கிய செவ்வி!

போராட்டத்தை இடைநிறுத்திய கைதிகள் !

இலங்கையில் சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வழங்கிய உறுதி மொழியை அடுத்து தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் இன்று சனிக்கிழமை கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்கு நேரடியாக சென்று கைதிகளை சந்தித்து உரையயாடியதையடுத்தே கைதிகள் உண்ணாவிரதத்தை எதிர்வரும் 7ம் திகதி வரை இடைநிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது. எதிர்கட்சி தலைவருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் , சுமந்திரன்…

யாழ்ப்பாணத்தில் திருட முயன்ற இராணுவத்தினர் கைது!

யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் ஏ 9 நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெரிய வீதி விளம்பரப் பலகைகளின் இரும்புக் கம்பிகளையும் இரும்புச் சட்டங்களையும் நள்ளிரவு நேரத்தில் களவாக வெட்டி எடுத்துச் செல்ல முற்பட்டபோது, சாவகச்சேரி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள 7 இராணுவத்தினரை மீட்டுச் செல்வதற்கு இராணுவ அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் அண்மைய தினங்களாக நெடுஞ்சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மர்மமான முறையில் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதை அவதானித்த சாவகச்சேரி காவல்துறையினர், வெள்ளிக்கிழமை இரவு அந்தப்…