Day: October 18, 2015

யார் யாரைப் புறக்கணிக்கிறார்கள் ?

-அரவிந்தன்- நவீன தமிழ் இலக்கியவாதிகள் திராவிட இலக்கியவாதிகளை புறக்கணிப்பதாக வைரமுத்து தன் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அப்படிப்பட்ட புறக்கணிப்பு நிகழ்ந்ததா என்பதைப் பார்க்கும் முன், வேறொரு விடயத்தை கவனிக்க வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக இங்கே திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. அரசு அதிகாரம், மாபெரும் கட்சி அமைப்பு, பல்வேறு அமைப்புகள், கல்வி நிறுவனங்களின் மீதான செல்வாக்கு ஆகிய அனைத்தும் அமையப் பெற்றவர்கள் திராவிடக் கட்சிகளின் பிரதிநிதிகள். மாறாக, நவீன இலக்கியவாதிகள் என அறியப்படும்…

விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ?

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டமையானது, சிங்கள ஊடகங்களின் கட்டுக்கதையென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். குறித்த செய்தியில் எந்தவிதமான உண்மையும் கிடையாதெனவும், அவ்வாறு எவரும் பேசவில்லையெனவும் தெரிவித்த அவர், சிங்கள ஊடகங்கள் தமிழ் மக்களிடையே திட்டமிட்டு பிளவுகளை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் மக்கள் இவ்வாறான செய்திகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வடமாகாண…

லிபரல்கள் என்.டி.பி உதவியுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது!

19.10.2015 நடைபெறவுள்ள கனடியப் பொதுத் தேர்தலில்  லிபரல் கட்சி பெருமளவு ஆசனங்களைக் கைப்பற்றி என்டிபிக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகி விட்டது. கருத்துக் கணிப்புகளின்படி  நான்கு வாரங்களுக்கு முன்பாக மூன்றாவது இடத்தில் இருந்த யஸ்ரின் ரூடோ படிப்படியாக முன்னேறி முன்னணிக்கு வந்துள்ளார். ஆயினும் 338 தொகுதிகளில் அரைவாசிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் லிபரல்கள் வெல்வது கடினம். மொல் கெயர் தலைமையிலான என்டிபிக் கட்சி பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலும் கியூபெக் மாகாணத்திலும் குறிப்பிடத்தக்க இடங்களில் தனது வெற்றியைத் தக்க வைத்துக்…

முன்னாள் மகளிர் அணி அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் தமிழினி காலமானார்

விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி இன்று ஞாயிறு அதிகாலை காலமானார். கிளிநொச்சி மாவட்டம் பரந்தனை சொந்த இடமாகக் கொண்ட தமிழினியின் இயற்பெயர் சிவசுப்பிரமணியம் சிவகாமி. இறக்கும்போது அவருக்கு 43 வயது. கடந்த 1991 ஆம் ஆண்டு 19 ஆவது வயதில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த தமிழினி பின்னர் அந்த அமைப்பின் மகளிர் பிரிவு அரசியல்துறை பொறுப்பாளராக உயர்ந்தார். அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்ததையடுத்து, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 29…