ராதிகா இம்முறை வெற்றி பெறுவாரா ?

ராதிகா இம்முறை வெற்றி பெறுவாரா ?

கனடியத் தேர்தல் ஆரம்பமாகி விட்டது. இன்றைய வாக்களிப்பில் வழமையை விடவும் கூடுதல் வாக்காளர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பார்கள் என்று கருதப்படுகிறது. வாக்களிப்பு நிலையங்களை அவதானிக்கையில் அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இது கனடாவின் 42 ஆவது பொதுத் தேர்தல் ஆகும்.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிகள் கூடுதலாக ஆக்கப்பட்டுள்ளன. வழமையாக உள்ள 307 தொகுதிகள் இம்முறை 338 தேர்தல் தொகுதிகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒன்ராரியோ மாகாணத்திற்கும்  கியூபெக் மாகாணத்திற்கும் கூடுதல் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

கனடிய வரலாற்றில் நீண்டதான  78 நாட்களாக  தொடர்ந்த பிரச்சாரத்தின் ஆரம்பத்தில் என்டிபிக் கட்சி வலிமையாக இருந்தது. ஆனால் இன்று ஊடகங்களில் வெளியான கருத்துக் கணிப்புகள் லிபரல்கள் பெரும்பான்மை பலத்தைப் பெற்று விடும் நிலையை அநேகமாக அடைந்து விடுவார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.  ஏறத்தாள நான்கு மில்லியன் கனடியர்கள் ஏற்கனவே வாக்குகளை பதிவு செய்து விட்டனர். இது கடந்த தேர்தலை விட எழுபது சதவிகிதம் கூடுதலானதாகும்.

ஒன்ராரியோ மாநிலமே லிபரல்களுக்கு அதிக இடங்களை வழங்கப் போகின்றது. அதிலும் ரொறொன்ரோ பெரும் பாகம் இன்னும் ஒரு படி மேலே சென்று கூடுதல் வெற்றியை லிபரல்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. இந்த எழுச்சியில் கடந்த முறை வெற்றி பெற்ற என்டிபிக் கட்சியைச் சேர்ந்த ராதிகா இம்முறை ஸ்காபுரோ வடக்கு தேர்தல் தொகுதியில் தோல்வியைத் தழுவுவார் என்று கருத்துக் கணிப்பொன்று(threehundredeight.com)  எதிர்வு கூறியுள்ளது. அந்தக் கணிப்பின் படி போட்டியிடும் ஆறு தமிழர்களில் ஒரு தமிழரே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அந்த வாய்ப்பு லிபரல் கட்சி சார்பில் ஸ்காபுரோ-ரூஜ்பார்க் தொகுதியில் போட்டியிடும் கரிக்கு உள்ளதாகக் கருதப்படுகிறது.

 

Share This Post

Post Comment