கியூபெக்கினை சுதந்திர நாடாக்க விழையும் இயக்கம் கனடியக் கூட்டாட்சி தேர்தல் முடிவுகளை அடுத்து ஒரே நாளில் இரண்டு முக்கிய தலைகளை இழந்துள்ளது.
கில்லஸ் டுசெப்பே அவர்கள் திங்களன்று தேர்தல் தனது பாராளுமன்ற ஆசனத்தையே வெல்லத் தவறிய பின்னர் வியாழக்கிழமை பிற்பகல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ‘புளொக் கியூபெக்குவா’ 2011 தேர்தலோடு ஒப்பிடுகையில் பத்து ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஆனால் அதன்மக்கள் ஆதரவு கிட்டத்தட்ட ஐந்து சத விகிதம் குறைந்தததால் உத்தியோகபூர்வ கட்சி அந்தஸ்த்தைப் பெறத் தவறிவிட்டது.
மொன்றியல் வடக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டள்ள றீல் ஃபோர்டின், இடைக்காலத் தலைவராகப் பதவியேற்று டுசெப்பேயின் விலகலை நிரப்புவார். 17 ஆண்டுகள் கட்சியின் தேசிய அவையில் அங்கம்வகித்த ஸ்டீபன் பேராட், (முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சியின் முன்னாள் இடைக்காலத் தலைவர்) அவர்கள் கூட, பதவியிறங்குவதாக வியாழனன்று அறிவித்துள்ளார்.
“எதிர்காலத்தில் நான் என்ன செய்யக் கூடும் என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும். தேர்தல் மூலம் எமக்குக் கிடைத்த பேரழுத்தம் தந்த காயம் பாரதூரமானது” என்று கருதுகிறார் ஸ்டீபன் பேராட்!
4