அமெரிக்க அரச பிரதிநிதி கெதரீன் ரஸல், இலங்கைக்கு விஜயம்

அமெரிக்க அரச பிரதிநிதி கெதரீன் ரஸல், இலங்கைக்கு விஜயம்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலக மகளிர் விவகார தூதுவர் கெதரீன் ரஸல், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இன்று இலங்கை வரும் இவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து பல முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரை சந்திக்கவுள்ளார்.

பால்நிலை சமத்துவத்தை மேம்படுத்துவது குறித்து குரல் கொடுத்துவரும் கெதரீன், இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற பாலியல் வன்கொடுமைகள் குறித்து பல விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

குறிப்பாக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்டங்கள் வலுப்பெற வேண்டுமென குரல்கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(யாழ் உதயன்)

Share This Post

Post Comment