உலகம் வெப்பமடையும் போக்கு குறித்த ஒரு அமெரிக்க ஆய்வு

உலகம் வெப்பமடையும் போக்கு குறித்த ஒரு அமெரிக்க ஆய்வு, உலகின் சில பகுதிகளில் வெப்ப நிலை மிக அதிகமாக உயர்ந்து, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரவே முடியாத நிலையை எட்டும் என்று கூறுகிறது.

மிக அதிக உஷ்ண நிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவை இணைந்த ஒரு நிலை காரணமாக உடல் வேர்வையை வெளியிட்டு அதன் மூலம் குளிர்ச்சியடைவதை இயலாததாக்கிவிடும் என்று அது கூறுகிறது.

அமெரிக்காவின் மேசச்சூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, குறிப்பாக வளைகுடா பகுதி நாடுகளைக் கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த பருவநிலை மாற்றம் தடுக்கப்படாவிட்டால், வளைகுடா நாடுகளில் , இந்த நூற்றாண்டின் இறுதியில், வெப்பக் காற்றலைகள் வீசும்போது, உஷ்ணநிலை சகித்துக்கொள்ளமுடியாத அளவுக்கு அதிகமான நிலைக்கு உயரும் என்று அது கூறுகிறது.
உலகம் வெப்பமடைதலை பாதுகாப்பான வரம்புக்குள் வைப்பதற்கு, கரியமில வாயு

உமிழ்வுகள் குறைக்கப்படவேண்டும் என்று இந்த ஆய்வு அறிக்கையை எழுதிய வல்லுநர்கள் கூறுகிறார்கள்., உலகின் சில பகுதிகளில் வெப்ப நிலை மிக அதிகமாக உயர்ந்து, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரவே முடியாத நிலையை எட்டும் என்று கூறுகிறது.

மிக அதிக உஷ்ண நிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவை இணைந்த ஒரு நிலை காரணமாக உடல் வேர்வையை வெளியிட்டு அதன் மூலம் குளிர்ச்சியடைவதை இயலாததாக்கிவிடும் என்று அது கூறுகிறது.

அமெரிக்காவின் மேசச்சூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, குறிப்பாக வளைகுடா பகுதி நாடுகளைக் கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த பருவநிலை மாற்றம் தடுக்கப்படாவிட்டால், வளைகுடா நாடுகளில் , இந்த நூற்றாண்டின் இறுதியில், வெப்பக் காற்றலைகள் வீசும்போது, உஷ்ணநிலை சகித்துக்கொள்ளமுடியாத அளவுக்கு அதிகமான நிலைக்கு உயரும் என்று அது கூறுகிறது.

உலகம் வெப்பமடைதலை பாதுகாப்பான வரம்புக்குள் வைப்பதற்கு, கரியமில வாயு உமிழ்வுகள் குறைக்கப்படவேண்டும் என்று இந்த ஆய்வு அறிக்கையை எழுதிய வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment