கனடாவின் ஈரானுக்கான முன்னாள் தூதுவர் கென் ரெயிலருக்கு இறிதி அஞ்சலி!

கனடாவின் ஈரானுக்கான முன்னாள் தூதுவர் கென் ரெயிலருக்கு இறிதி அஞ்சலி!

கனடாவின் ஈரானுக்கான முன்னாள் தூதுவர் கென் ரெயிலரது இறுதி அஞ்சலி  Timothy Eaton Memorial Church இல் 27.10.2015 அன்று நடைபெற்றது. யஸ்ரின் ரூடோ, ஜோ கிளார்க்,  மைக் ஹாரிஸ் போன்ற முக்கிய  பிரமுகர்கள் இறிதி அஞ்சலியில் கலந்து கொண்டார்கள்.

1979 ம் ஆண்டு தெஹ்ரானில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அமெரிக்கர்கள்  பணயக் கைதிகளாக வைக்கப்பட்ட விவகாரம் உலகப் பிரச்சினையாக உருவெடுத்திருந்தது. அச் சமயத்தில் அறு அமெரிக்க தூதரக அதிகாரிகளைக் கனடியர்களாக ஈரானிய அரசை நம்ப வைத்து கனடியக் கடவுச் சீட்டுகளைக் களவாகத் தருவித்து நாட்டை விட்டு அவர்களைப் பத்திரமாக வெளியேற்றியிருந்தார்.

இந்தத் துணிகரச் செயலினால் கென் ரெயிலர் அமெரிக்க மக்களாலும் அமெரிக்க அரசினாலும் பெரிதும் பாராட்டிக்  கௌரவிக்கப்பட்டார். அமெரிக்க ஜனாதிபதி றேகன் ரெயிலருக்கு விருது வழங்கிப் போற்றியிருந்தார். இந்தக் கதையை  ‘ஆர்கோ’ என்ற பெயரில் ஹொலிவூட்டில் திரைப்படமாகவும் எடுத்திருந்தார்கள்.

ஹெல்ஹரியில் பிறந்த இவர் கடந்த 15.10.2015 அன்று 81 வயதில் நியூயோர்க் வைத்தியசாலையில் காலமானார்.

Share This Post

Post Comment