இலங்கைக் கடலில் மீன் பிடிக்கும் உரிமை ?

இலங்கைக் கடலில் மீன் பிடிக்கும் உரிமை ?

கணன் சுவாமி அறிக்கை!
இலங்கை கடலில் இந்திய மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமை உடையவர்கள். இந்திய கடலில் இலங்கை மீனவர்களும் பாரம்பரிய ரீதியிலான மீன்பிடி உரிமை உடையவர்கள். கடந்த கூடங்குள அணுஉலை ஆரம்பத்தின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய கடல்பகுதியில் இலங்கை மீனவர்களுக்கு இருந்த பாரம்பரீய மீன்பிடி உரிமையை இந்திய அரசு ரத்து செய்ய விரும்பியது. பேச்சுவார்த்தையின் முடிவில் இந்திய இலங்கை கடலில் இருந்த இந்திய இலங்கை மீனவர்களுக்கான பாரம்பரிய மீன்பிடி உரிமையை இரு நாடுகளும் ரத்து செய்தது.

இலங்கை மந்திரிகள், ஜனாதிபதிகள் என எவர் இந்தியாவுக்கு சென்றாலும் அங்கு முன் வைக்கப்படும் பிரச்சனை இந்திய இழுவை படகு மீனவர்களை இலங்கை கடலில் மீன்பிடிக்கவிடணும் என்பதாகவே இருக்கும். கடந்த வாரம் இலங்கை அரசு தன் அனுமதி இன்றி ஆழ்கடல் மீன்பிடி செய்யும் இலங்கை மீனவர்களுக்கு பிற நாடுகள் அபராதம் விதிக்க அனுமதிக்கும் சட்டத்தில் கையொப்பமிட்ட கையுடன் எல்லைதாண்டும் இந்திய மீனவர்படகுகளுக்கு 15 கோடி வரையில் அபராதம் விதிக்கப்படும் என அறிக்கை விட்டது. உடனேயே தமிழகம் வழமை போல் பொங்கி எழுந்தது.

பாஜக அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் அவர்கள் 15 கோடி அபராதம் இலங்கை அரசு எமது மீனவர்களுக்கு விதிக்குமானால் நாம் 40 கோடி ரூபா அபராதம் விதிப்போம் என வெறுவாயை சப்பினார்!! எளவு வருடத்துக்கு ஒரு பத்து இலங்கை மீன்பிடிப்படகு இந்திய எல்லைக்குள் வருமா எனும் நடைமுறை கூடத்தெரியாதவர் எல்லாம் அமைச்சராக இருந்தால் என்ன நல்லது நடந்து விடும்?

கச்சதீவை திருப்பி வாங்கணும் என ஒருத்தர் சொல்கிறார்.! மூதேவிங்களா கச்சதீவு உங்கப்பன் வீட்டு சொத்தா!? கச்சதீவுக்கு மிக அண்மையில் இருக்கும் நெடுந்தீவானுக்கு இல்லாத உரிமை எப்படி அடுத்தவனுக்கு வந்திடும்!? மேலும் கச்சதீவு இலங்கை வசம் கொடுக்கப்பட்ட வரலாற்று அரசியல் பின்னணி தெரியாமல் சும்மா உளறக்கூடாது. ஶ்ரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தை மீறவேண்டிய அவசியம் இந்திராகாந்திக்கு இருந்ததால் அவர் நீண்டகால “இலங்கை அரசின் வேண்டுகோளான” கச்சதீவை இலங்கை அரசிடம் திருப்பி கொடுத்தார். கச்சதீவு யாருடையது எனும் சர்ச்சைக்கு பழைய போத்துகீஸிய கார்டோகிராபி இலங்கை அரசுக்கே சாதகமானது.

இதுக்கு மேல் பாட்டாளிமக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்கள் 800 மீனவர்கள் கொல்லப்பட்டனர் என ஒரு புதிய எண்ணிக்கையை அறிமுகம் செய்தார். தமிழகத்து பத்திரிகைகாரர்கள் முடிக்கொண்டு இருந்தனர் அதெப்படி456, 800 ஆச்சு என ஒரு பய கேட்கவில்லை!!? அடிச்சுவிட அளவே இல்லையா?

இந்திய பெருமுதலாளிகளின் இழுவைப்படகுகளின் அத்துமீறிய திருட்டு மீன்பிடி மூலம் எமது வறிய மீனவர்களின் வலைகள் காணாமல் போகின்றது அல்லது நாசமாகின்றது. வறிய மக்களின் சிறுதொழில் வாழ்வாதரம் அழிக்கப்பட்டு அவர்களை கடலுள் இறங்க முடியா நிலைக்கு தள்ளிவிடுகிறது. எமது இயற்கை வளம் முறையற்ற இந்திய இழுவை மீன்பிடியால் அழிக்கப்படுகிறது இதை எமது அரசியல்வாதிகள் கண்டு கொள்வதில்லை.

ஒவ்வெருமுறையும் எமது இலங்கை அரசியல்வாதிகள் இந்தியா செல்லும் பொழுது அங்கு பெருத்த அளவில் லஞ்சம் பெற்றுக்கொண்டு இந்திய மீனவர்களை அத்துமீற அனுமதிக்கின்றனர் அல்லது கண்டும் காணாமல் விடுகின்றனர்.
இந்த இழுவை படகுகள் இந்திய கரையில் இருந்து சுமார் 3 கிலோமீட்டருக்கு அண்டிய பகுதிகளில் இழுவைசெய்து மீன்பிடிக்க கரையோரமாவட்டங்களில் அனுமதி இல்லை. மீறினால் இந்திய நாட்டுப்படகு மீனவர்கள் கலவரத்தில் ஈடுபட்டு கொலைவிழும்! ஆனால் எமது தீவுப்பகுதிக்கரையோரமாக சுமார் 150 மீட்டர் வரை இவர்கள் வந்து இழுவைசெய்து கடல்வளத்தை நாசம் செய்து விடுகிறார்கள். இதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என இந்திய அரசு விரும்புகிறது. பேச்சுவார்த்தை என்பது ஒரு தார்மீக அடிப்படை நியாயத்துக்காக இருக்கலாம் ஆனால் இதுபோன்ற இந்திய பெருமுதலாளிகளின் இழுவை படகுகளின் அறமற்ற செயலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண எண்ணுவது கேலிக்குரியது.
எமது வருங்கால சந்ததியின் வளநலன் கருதி இந்திய மீனவர்களின் எல்லைமீறும் அழிச்சாட்டியத்துக்கு இலங்கை அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

(கணன் சுவாமியின் முகநூலிலிருந்து)

Share This Post

Post Comment