ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானது. அதில் எவரும் உயிர் தப்பவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
பயணிகளில் பெரும்பாலானவர்கள் ரஷ்ய சுற்றுலா பயணிகள் ஆவர். ரஷ்ய விமான நிறுவனமான கொகலிமாவியா நிறுவனத்துக்கு சொந்தமானதே இந்த ஏ 321 ரக விமானம். பயணிகளின் உறவினர்களுக்கு உதவுவதற்காக செயிண்ட் பீற்றர்ஸ்பேர்க்கில் ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
(பிபிசி தமிழோசை)