Month: November 2015

ஜோர்தானில் கனடிய அமைச்சர்கள் சிரிய அகதி முகாம்களைப் பார்வையிட்டனர்!

கனடிய அரசு ஜோர்தானின் தலைநகரான  அம்மானில் கனடா வரவுள்ள சிரிய அகதிகளின் நலன்களைப் பேணுமுகமாக  ஞாயிற்றுக்கிழமை அலுவலகமொன்றை திறந்துள்ளது. 25,000 சிரிய அகதிகளை கனடாவிற்குள் கொண்டு வரும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டுக்கான திட்டத்தின் முதல் கட்டமாக மூன்று கனடிய அமைச்சர்கள் தலைநகர் அம்மானில் முகாமிட்டுள்ளனர். மேலும் 90 அலுவலர்கள்  அடங்கிய குழுவொன்றும் ஜோர்டான் செல்ல உள்ளது. குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கெலும், சுகாதார அமைச்சர் ஜேன் பில்பொட் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜிட் சய்ஜான் ஆகிய மூன்று அழைச்சர்களே…

“ஓசன் லேடி” மற்றும் “எம்வி சண் சீ” கப்பல்களில் வந்தவர்களுக்கு என்ன நடக்கும் ?

அகதிகளாக இடம் பெயர்ந்து கனடாவுக்கு வருபவர்கள் தங்களுக்குள் உதவி செய்து கொள்வது அல்லது ஏனைய அகதிகளுக்கு உதவி செய்வது போன்றவற்றை  ஆட்கடத்தல் எனக் கொள்து  ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கனேடிய உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கை அகதிகளை சட்டவிரோத குடியேறிகள் என்ற வகையில் தடுத்து வைக்கும் கனேடிய சட்டத்தின் பகுதிகள், அனைத்துலக அகதி சட்டங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதாக   கனேடிய உயர்நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் “பெவரெலி மிச்செலின்” தெரிவித்துள்ளார். 2009 மற்றும் 2010ம்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி ஒதுக்கவில்லை : சம்பந்தர்

அரசாங்கத்தின் அடுத்த நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு ஏற்ற முறையில் திருத்தம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான முன்மொழிவுகள் மாத்திரமே வரவு செலவுத் திட்டத்தில் உள்ளதாகவும் ஆனால் நிதி ஒதுக்கீடுகள் இல்லை என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சுக்கான…

கைதிகள் விடுதலையை விரைவுபடுத்தவும் : மனித உரிமைகள் ஆணைக்குழு

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழும் அவசரகால சட்ட விதிமுறைகளின் கீழும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உரிமைகள் தொடர்பில் ´ஆழ்ந்த´ கவலையடைந்துள்ளதாக கூறியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு சட்டமா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளது.  குற்றச்சாட்டுக்கள் இன்றியும், நம்பகமான ஆதாரங்கள் இன்றியும் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள்…

உன் அழைப்பிற்கு நன்றி. – சக்கரவர்த்தி

உன் அழைப்பிற்கு நன்றி. ==================== -சக்கரவர்த்தி- இத்தனை அழகாய் இருப்பிடம் வேறெங்கும் இருக்குமா தெரியவில்லை. வேளைக்கு உணவு; நோய் காணும் முன்னே மருந்து; யாருக்கு கிடைக்கும் சொல்லுங்கள். விரட்டி உயிர் பறிக்கும் வேட்டையன் இல்லை. மட்டற்ற கலவிக்கு சாஸ்த்திரமும் வேண்டியதில்லை. ஜாலத்தில் கிளர்கிறது வர்ணங்களால் வடிவம் கொண்ட உலகு. உயிர் வாழ்வதுக்குண்டான அனைத்து உத்தரவாதமும் உனக்குண்டு. இத்தனைக்கும் எதிர்மாறாய் சேறும் சகதியுமாக நிலையாமையில் கட்டமைக்கப்பட்டதென் அழுக்காறு உலகு. இரையில் பொறி வைத்து உயிர் பறிக்கும் குரூரம். நெளியும்…

எஸ்.பொவின் “சடங்கு” நாவல் குறித்து எழுத்தாளர் அ.ஜேசுராசா!

சடங்கு -அ.ஜேசுராசா-        மறைந்தும் மறையாத மூத்த எழுத்தாளர்எஸ்.பொ. நினைவாக, அவரது சடங்கு நாவலை எடுத்து இரண்டு நாள்களாக வாசித்தேன். 1966 ஆம் ஆண்டு சுதந்திரன் வாரப் பத்திரிகையில் தொடராக வந்த அந்த நாவல், 1971 இல் கொழும்பு அரசு வெளியீடாக நூல் வடிவில் வெளிவந்துள்ளது. அப்போது வாசித்ததற்குப் பின்னர், நீண்ட இடைவெளியின் பிறகு இப்போதுதான் வாசித்தேன். எனக்கு நன்கு பிடித்தது; முக்கியமான நாவல் என்ற உணர்வு. வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்…

பிரிட்டன் டேவிஸ் கோப்பையை வென்றது!

உலகளவில் நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஆடவருக்கான டென்னிஸ் போட்டிக்கு அளிக்கப்படும் டேவிஸ் கோப்பையை பிரிட்டன் அணி வென்றுள்ளது. மிகவும் பெருமை வாய்ந்த இந்தக் கோப்பையை பிரிட்டன் அணி 1936ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வென்றுள்ளது. தனி நபர்களுக்கு இடையேயான கடைசிப் போட்டியில் ஆண்டி மர்ரி பெல்ஜியத்தின் டேவி கோஃபினை வென்றதன் மூலம் கோப்பையை கைப்பற்றியது. இறுதி போட்டி நம்ப முடியாத அளவுக்கு மிகவும் கடுமையாக இருந்தது என, போட்டிக்கு பிறகு அவை இடம்பெற்ற ஹெண்ட் நகரில்…

யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின் பத்தாயிரம் புத்தகங்கள்!

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் சிலர் இணைந்து 10,000 புத்தகங்களை ஞாயிறன்று அன்பளிப்பு செய்திருக்கின்றார்கள். கடந்த 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு கடந்த நேரத்தில் இடம்பெற்ற அரச வன்முறைச் சம்பவம் ஒன்றில் யாழ்ப்பாணம் நூலகம் எரியூட்டப்பட்டது. இதன்போது அங்கிருந்த சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் எரிந்து சாம்பலாகிப் போயின. இதனையடுத்து, இந்த நூலகம் படிப்படியாக புனரமைக்கப்பட்டு, பின்னர் புதிய கட்டிடம்…

எவரெஸ்ட் சிகரத்தின் அருகே பனி ஏரி ஒன்று உருகிறது!

எவரெஸ்ட் சிகரத்தின் அருகே பனி ஏரி ஒன்று உருகி சாதாரண ஏரிகளாக உருவெடுத்துக்கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்தப் பகுதியில் பனிக்கட்டிப் பிரதேசங்கள் குறைவதைக் காட்டும் மிகச் சமீபத்திய சமிக்ஞையாக அவர்கள் இதைக் குறிப்பிடுகிறார்கள். இந்த ஏரிகள் முதலில் சிறு சிறு குளங்களாக உருவாகி பின்னர் ஒன்றாக இணைகின்றன. இதன் மூலம், கும்பு பனிஏரியை உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற முயலும் மலைஏறிகள் கடப்பது மேலும் கடினமாகும். அவை நிரம்பி வழிந்தால், மலையின்…

சௌதி அரேபியாவில் ஒரே நாளில் பலருக்கு மரண தண்டனை ?

சௌதி அரேபியா பல டஜன் கணக்கானோருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டமிடுவதாக வரும் செய்திகள் குறித்து அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு அச்சம் தெரிவித்திருக்கிறது. 55 பேர் “பயங்கரவாதக் குற்றங்களுக்காக” மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்று ஒக்காஸ் என்ற பத்திரிகை கூறியது. ஆனால் அல் ரியாத் பத்திரிகையில் வெளியாகி, தற்போது நீக்கப்பட்ட செய்தி ஒன்றில், 52 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதாக்க் கூறப்பட்டிருந்த்து. இதில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட ஷியா முஸ்லீம் பிரிவினரும் அடங்குவர்…