செழுமை மிக்க நாடுகளின் பட்டியலில் இலங்கை 61 வது இடத்தில்!

செழுமை மிக்க நாடுகளின் பட்டியலில் இலங்கை 61 வது இடத்தில்!
2015ஆம் ஆண்டின் செழுமைமிக்க நாடுகளில் இலங்கை 61வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.லண்டனை தலைமையகமாகக் கொண்ட லெகாடெம் நிறுவகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நாடுகளின் மக்கள், அவர்களின் வருவாய் என்பவற்றுடன் 8 துறைகளான பொருளாதாரம், கைத்தொழில், வாய்ப்புக்கள், நிர்வாகம், கல்வி, சுகாதாரம், காப்பு மற்றும் பாதுகாப்பு, தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் சமூக முதலீடு என்பவற்றின் தரவுகளை கொண்டு இந்த பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
142 நாடுகளில் இந்த தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. 2012ம் ஆண்டில் இலங்கை இந்த பட்டியலில் 60வது இடத்தைக் கொண்டிருந்தது.
பட்டியலின்படி நேபாளம் 89வது இடத்திலும், இந்தியா 99வது  இடத்திலும், பங்களாதேஸ் 103வது இடத்திலும், பாகிஸ்தான் 130வது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 141வது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை நோர்வே தொடர்ந்தும் 7வது வருடமாக செழுமைமிக்க நாடுகளில் முதல் இடத்தை பெற்றுள்ளது.
(யாழ் உதயன்)

Share This Post

Post Comment