தொடர்ந்தும் ‘என்டிபிக்’ கட்சித் தலைவராக மொல் கெயர்!

தொடர்ந்தும் ‘என்டிபிக்’ கட்சித் தலைவராக மொல் கெயர்!

35 இலட்சம் கனடிய மக்கள் ‘என்டிபிக்’ கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள். 44 தொகுதிகளை அது வென்றுள்ளது. ‘என்டிபிக்’ கட்சி வரலாற்றில் கட்சிக்கு இரண்டாவது தடவையாகக் கூடுதல் இடங்கள் கிடைத்திருக்கின்றது.

கடந்த தேர்தலில் எவ்வாறான பிழைகள் நேர்ந்தன என்பது குறித்துத் தகுதியான குழு நியமிக்கப்பட்டு ஆராயப்படுமென மூன்று வாரங்களாக மௌனம் சாதித்த கட்சித் தலைவர் ‘மொல் கெயர்’ நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றார். தொடர்ந்தும் கட்சித் தலைவராக நீடிக்கவுள்ள ‘மொல் கெயர்’ கனடிய நாடாளுமன்றத்தில் பொறுப்புள்ள முற்போக்கான கட்சியாக என்டிபி நீடிக்கும் என இன்று ஊடகங்களுக்கு அறித்த செவ்வியில் வலியறுத்திக் கூறியுள்ளார்.

‘என்டிபிக்’ கட்சியில் இந்தத் தேர்தலின் பொழுது போட்டியிட்டவர்களில் சிலர் அதற்கான தகுதியைக் கொண்டிருக்கவில்லை என்ற விமர்சனமும் ‘என்டிபிக்’ கட்சி ஆதரவாளர்களிடம் உண்டு. பல்வேறு கட்சிகளின் பின்னால் திரிந்து அந்தக் கட்சிகளில் இடம் கிடைக்கவில்லை என்பதற்காக ‘என்டிபிக்’ கட்சியின் அடிப்படைக் கொள்கைகளைச் சரிவரத் தெரியாதவர்களே வேட்பாளர்களாகப் போட்டியிட்ட அவலமும் நடந்து முடிந்த தேர்தலில் ‘என்டிபிக்’ கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. வெற்றி தோல்விகளுக்கு அப்பால் குழுவாதமும் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளும் அற்ற ‘என்டிபி’ ஆதரவுத்தளத்தை எவ்வாறு பேணுவதென்பது எதிர்காலத்தில் கட்சிக்கு மிகுந்த பிரச்சினையாக இருக்கும்.

Share This Post

Post Comment