போர்க் குற்றவாளிகளை எவரும் தண்டிக்க முடியும் – சரத் பொன்சேகா

போர்க் குற்றவாளிகளை எவரும் தண்டிக்க முடியும் – சரத் பொன்சேகா

போரை நெறியாள்கை செய்தமை, உத்திகளை வகுத்தமை ஆகியவற்றுக்கான பொறுப்பை நான் ஏற்கின்றபோதும், போரின்போது எவரேனும் மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டிருந்தால் குற்றங்களை இழைத்திருந்தால் அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். அவர்களை யாரும் தண்டிக்க முடியும். இவ்வாறு முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வெள்ளைக்கொடிச் சம்பவம் போன்ற குற்றச்சாட்டுக்கள் தான் இறுதிப் போரின் இறுதி ஆறு நாட்கள் காலப்பகுதியில் வெளிநாட்டில் இருந்தபோதே சுமத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்த பொன்சேகா, இதற்குத் தான் பொறுப்பேற்கப்போவதில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இறுதிப் போர் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில்இ அது தொடர்பாக இலங்கை அரசு நடத்தவுள்ள உள்ளக விசாரணையை வரவேற்றுள்ள பொன்சேகாஇ இந்த விசாரணையில் நம்பகத் தன்மையை ஏற்படுத்துவதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்களும்இ ஆலோசகர்களும் நியமிக்கப்படுவதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொன்சேகா கருத்து வெளியிடுகையில், இந்தக் குற்றங்களைப் புரிந்த மஹிந்த ராஜபக்‌ஷ, கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோர் சிறையில் இருக்கவேண்டியவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்‌ச போரை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதில் பெரும் அவசரத்தில் இருந்தார் எனக் குறிப்பிட்ட பொன்சேகா, 2008ஆம் ஆண்டு ஜனவரி முதல் அவர் பொறுமையிழந்தவராகக் காணப்பட்டார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். நீண்ட போருக்கு மகிந்த ராஜபக்ச தயாராக இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள பொன்சேகா, போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற அழுத்தத்தை மஹிந்த தன் மீது பிரயோகித்தபோதும் தான் உரிய முறையில் போரை முன்னெடுத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியாகியுள்ள தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலின் போதே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
போரின்போது தனிப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருக்குமாயின் அதாவது இரண்டு இலட்சம் பேரைக்கொண்ட பெரும் இராணுவப் படையணியில் 7,8 பேர் எதையேனும் இழைத்திருந்தால் அதற்கு நான் பொறுப்பேற்கமாட்டேன். அவர்களே அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும். அவர்களை யாரும் தண்டிக்கமுடியும். அது இராணுவத்தின் பிரச்சினையல்ல. நாம் அவர்களைப் பற்றிக் கவலைகொள்ள முடியாது. யாரேனும் மனித உரிமைகளை மீறிச்செயற்பட்டிருந்தால் நான் இராணுவத்தினருக்கு வழங்கிய உத்தரவுகளுக்கு எதிராக குற்றங்களை இழைத்திருந்தால் அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டும். நான் யுத்தத்தின் கடைசி ஆறு நாட்களும் வெளிநாட்டில் இருந்தேன். இதன்போதே வெள்ளைக் கொடி சம்பவம் போன்ற குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டிருப்பதை பதுங்கு குழி என்று கூறமுடியாது. மாறாக அதுவொரு நிலக் கீழ் மாளிகை. விடுதலைப்புலிகளின் சிறிய விமானத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு நிலத்தின் கீழ் நான்கடுக்கு கட்டடம் அவசியமில்லை. நான் இராணுவத் தலைமையகத்திலேயே இருந்தேன். அது ஜனாதிபதி மாளிகையில் இருந்து 200 மீற்றர் தொலைவிலேயே இருந்தது. போர்க் காலத்தில் மூன்று அறைகளைக் கொண்ட கட்டடத்திலேயே நான் இருந்தேன். நான் எனது படுக்கை அறைக்கு மேலாக ஒரு கொங்கீரிட்டை மாத்திரமே அமைத்துக்கொண்டேன். அதற்கு எனக்கு 50 ஆயிரம் ரூபா மாத்திரமே செலவாகியிருந்தது.

ஏனெனில், இராணுவத்தைச் சேர்ந்தவன் என்ற படியால் 50 ஆயிரமே செலவாகியிருந்தது. விடுதலைப் புலிகளின் அந்தக் குட்டி விமானங்கள் குறித்து பெரிதும் அச்சம் கொண்டவர்களாக மஹிந்த ராஜபக்‌ஷவும் கோட்டாபய ராஜபக்‌சவும் இருந்திருப்பார்களேயானால் அதற்கான நான்கு அடுக்கு கட்டடத்தை நிலத்தின் கீழ் கட்டியிருப்பார்களேயானால் அவர்கள் தலைவர்கள் என்று அழைக்கப்படுவதற்கு அருகதையற்றவர்கள். மாறாக அவர்கள் முதற்தரக் கோழைகளாகவே நோக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

(யாழ் உதயன்)

 

Share This Post

Post Comment